Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-11

சற்று அமைதி காத்து விட்டு ராணியாரும் இரங்கி விட்டார் போல் தெரிந்தது சரி இவனைக் கூட்டிக் கொண்டு போய் கழுதைப் பட்டாளத்தைக் காட்டுங்கள் என்றார் ராணி ஆஹா  மனசுக்குள்ளே மத்தாப்பு கோமாளி கோபலனுக்கு.  மந்திரியாரும் ராணியிடம் விடை பெற்றுக் கொண்டு அவனை கழுதை வளர்ப்பு இடத்துக்கு அழைத்துச் சென்றார்.  போகும் போதே மந்திரியின் காதில் இரத்தம் கொட்டும் அளவு கதை அளர்ந்து விட்டான்  . பொறுமை இழந்த மந்திரி அதட்டி விட்டான் ஏன்டா நீயும் கழுதை போல் கத்துகிறாய் மூடித்து வரமாட்டாயா உன் வாயை என்று அதட்டலோடு அடங்கிப் போனான்.  கழுதைப் பட்டியைப் பார்த்ததும்  ச்சும்மா வானுக்கும் பூமிக்கும் குதித்தான். பாவம்  அப்பாவி உள்ளம் என்று கழுதை மேய்ப்போன் மனதில் நினைத்துக் கொண்டான்  .மந்திரியின் தேர்வில் ஒரு கழுதை அவனது கையில் ஒப்படைக்கப் பட்டது.  வாங்கிய வேகத்திலே பேரும் சூட்டி விட்டான் 

பேரோ பாரி   அதை வைத்து பாடலும் அப்போதே பாடி வச்சான்   
காந்தாரி பாரேன்டி நானும் வாரேன்டி 
பாரி மேல ஏறி  சவாரி வாரேன்டி 
சேரியோரம் உனைத் தேடி வாரேன்டி.

பாட்டைக் கேட்ட மந்திரி சிரித்து விட்டு கேட்டார் உன் மனைவி பெயர் காந்தாரியா என்று இல்லை இல்லை அவள் பெயர் சிந்தாமணி ஆனால் அவளுக்கு நான் வைத்த பெயர் காந்தாரி அவள் சரியான பாஜாரி ஐயா என்றான் மந்திரியைப் பார்த்து  ஓகோ என்று தலை அசைத்த மந்திரி கையில் கொஞ்சம் பணம் கொடுத்து வழி அனுப்பி விட்டார்  .

(என பாட்டி முடித்ததும் அப்பாடா என்றாங்க மேரி அக்கா  என்னடி என்று பாட்டி கேட்டதும் மேரியக்கா சொன்னாங்க இல்ல பெரியம்மா அந்த கோபாலுக்கு என்னாகுமோ என்று பதட்டமாய் இருந்துச்சு    .இப்படி ஒரு முட்டாள் நம் ஊரில் இருந்தால் எப்படி இருக்கும் என்றாள் பாட்டியோட சின்ன மருமகள் அதற்கு பேரன் உதயன் சொன்னான் சித்தி நம்மட நாட்டில் அரசன் இல்லையே அரசனும் இல்லை கோமாளியும் இல்லை இருந்தா ஜாலியாக இருக்கு இல்ல சித்தி என்றான்.  கவனித்துக் கொண்டு இருந்த பாட்டியின் இளைய மகன் சொன்னான் அங்கு ஒரு முட்டாள் தான் இருந்தான் இங்கு வரிசை கட்டி நிக்குறது தெரியலையோ என்று நாசுக்காக கேலி செய்தான்.
(தொடரும் )



 


Post a Comment

0 Comments