
விழிகளால் சந்தித்தபோது
கூரான உனது
பார்வையின் அதிர்வால்
நடுங்க வைக்கும்
பனியாக படர்ந்தாய்
வார்த்தைகளால் சந்தித்த போது
வீசிய தணலின்
வெப்பத்தால்
வியர்வையை துளிர்க்க வைக்கும்
வெயிலாக மிதந்தாய்
மனங்களால்
சந்தித்த போதுதான்
அன்பு வழிந்தோடும்
அதிசயமாய் மலர்ந்தாய்
உயிரே!
ஆகாயத்தைப் பார்த்து
கைகள் உயர்த்தி
ஆனந்தக் கூத்தாட
மனதோடு பேசும்
நீ என் மழை...
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்...
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments