
கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ என்ற ஒற்றுமை பயணம் ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது. கடந்த 145 நாட்களாக சுமார் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவு பாதயாத்திரை மேற்கொண்ட ராகுலின் இந்த நெடும் பயணம், ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. இதில் மூத்த தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ராகுல் காந்தியின் பாதயாத்திரை நிறைவு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் நடைபெறும் நிறைவு விழாவில் கலந்துகொள்ள 23 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாஜக-வின் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதை ராகுல் காந்தியின் இந்த யாத்திரை உறுதி செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments