Ticker

6/recent/ticker-posts

இரும்பி கம்பியால் அடித்தே 25 வயது பெண் கொலை... அதுவும் கல்லூரிக்கு வெளியே!!


டெல்லி மாளவியா நகரில் கல்லூரிப் பெண் ஒருவர் இன்று இரும்பு கம்பியால் பலமாக தாக்கப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணான கமலா, நேரு கல்லூரி மாணவி கல்லூரி வளாகத்திற்கு வெளியே தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

 
இன்னும் அடையாளம் காணப்படாத குற்றவாளி, தற்போது தலைமறைவாக உள்ளார். தெற்கு டெல்லி போலீஸ் துணை கமிஷனர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தெற்கு டெல்லி மாளவியா நகரில் உள்ள அரபிந்தோ கல்லூரி அருகே 25 வயது இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவரது உடல் அருகே இரும்பு கம்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. "முதற்கட்ட விசாரணையில் பெண்ணை கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது,'' என, போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

zeenews


 



Post a Comment

0 Comments