
குறள் 1099
ஏதிலார் போலப் பொதுநோக்கு
நோக்குதல் காதலார் கண்ணே உள.
அப்பா!
என் டைய வகுப்புத் தோழி
நாலு பேரத் தாண்டி
உக்காந்திருக்குராப்பா!
முன்னபின்ன தெரியாத
மாதிரி அடிக்கடி பாத்து
திரும்பிக்கிறா!
இந்தமாதிரி பார்வைக்
குறும்பெல்லாம்
நெருக்கமான நட்புலுதான்
இருக்கும் நெனக்கிறேன்!
குறள் 1100
கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள் என்ன பயம் இல.
அம்மா! அமெரிக்கவுல இருந்து
குழலி வந்திருக்காம்மா!
கிட்டத் தட்ட பத்து ஆண்டுகள்
ஆயிருச்சு பாத்து!
வீட்டுக்குள்ளே நுழஞ்ச உடனே
என்னையே வச்சகண்ண வாங்காம
பாத்துக்கிட்டே இருந்தாம்மா!
பேச்சே வரலே!
தோழிகளின் கண்கள்
சந்திச்ச பிறகு
சொற்களுக்கு வேலையே இல்லம்மா!
அவ மனஓட்டத்த புரிஞ்சுகிட்டேம்மா!
குறள் 1101
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலம்
ஒண்டொடி கண்ணே உள.
அம்மா!
பக்கத்துவீட்டு பாப்பாவைப்
பாத்தேன்.
அதைப் பாக்கப் பாக்கப் பரவசம்!
மழலையக் கேட்டா இன்பம்!
முகர்ந்து பாத்தா வாசம்!
முத்தம் கொடுத்தா களிப்பு!
தொட்டுத் தூக்குனா சிலிர்ப்பு!
எல்லாமே அந்தக் குழந்தைகிட்ட
இருக்குமா!
குழந்தையின் ஏக்கம்
குறள் 1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
என்னங்க!
குழந்தைக்கு உடம்பு
அனலா கொதிக்குதுங்க!
மருத்துவர அழச்சுட்டுவாங்க!
மருத்துவர் வந்தார்!
குழந்தை முனகலைக் கேட்டார்!
ஆயா! ஆயா! என்று சொல்லிக்
கொண்டிருந்தாள்!
அந்த ஆயாவை நாங்கள்
நிறுத்திவிட்டோம்! என்றனர்!
உங்களைவிட ஆயா அன்புடன்
பார்த்திருக்கின்றார்.
அவரை உடனே வரச்சொல்லுங்கள்.
எல்லாம் சரியாகிவிடும்.
மருந்தால் நோய்கள் குணமாகும்.
இங்கே ஆயாதான்நோய்!
ஆயாதான் மருந்து!
என்றார் மருத்துவர்.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments