Ticker

6/recent/ticker-posts

அப்பா!


மகனே என்ற வார்த்தையை 
உரக்கச் சொல்லாதவர்
உனக்கு எனக்கு என்று 
பாரபட்சமில்லாத உழைப்பாளி
கூட்டி கழித்திடும் 
சொந்தங்களை உருவாக்கியவர்
சுயநலம் என்றதொரு 
வார்த்தையை கடைசி சொட்டு 
பால்வரை மறந்தவர்
அம்மாவின் அனைத்தும் ஆனவர்
ஐந்தாவது மகனுக்கு அழகு 
சட்டை வாங்கித்தந்தவர்
சத்து மருந்து  அருந்தும்பொழுது 
சொட்டு விரல் ஊட்டியவர்
ஆலமரத்தில் அப்பா என்ற 
பெயர் பெற வைத்தவர்
ஐந்தரைப் பெட்டிகளின் 
எடை அறிந்தவர்
தபால் அலுவலகத்தின் 
தனித்துவமான பெயராளி அவர்
கட்சிகாரர்களின் ஐந்து வருட 
அழைப்பாளி அவர்
ஐநூறு,ஆயிரம்களின் 
கைரேகை பதிவாளர் அவர்
நேற்று ஈன்ற கன்றிற்கு புண்ணாக்கு 
வாங்கும் குடும்பவாதி அவர்
புது சட்டைகளில் 
மடிப்பு கசங்காதவர்
அடுத்த விசேசங்களில் 
பல சட்டைகள் 
பற்றவில்லை என கொடுத்தவர்
பழைய செருப்பு மகாராஐன்
பழைய சோற்றின் தீவிர வரும்பி
பெற்றோர்களை காத்தவர்
என் தமக்கைகளை 
பெற்றவளாய் பார்த்தவர்
உன் நகலென நான் வந்தேன்
என் நிழலென நீ இருந்திடு
யாருமறியா நிலவின் பின் இருள்
பாதுகாப்பாய் என்றும்
அப்பா

சே கார்கவி கார்த்திக்


 



Post a Comment

0 Comments