
இருவரும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர் என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் சொன்னார்.
கட்சியின் பெயருக்குக் களங்கம் உண்டாக்கியதற்கு வருந்துவதாகத் திருவாட்டி நிக்கோல் சியா தெரிவித்தார்.
தாம் பதவி விலகுவதாகப் பிரித்தம் சிங்கிற்கு அவர் கடிதம் எழுதினார்.
"பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினருடன் தகாத உறவு வைத்திருந்ததால் கட்சியைவிட்டு நான் உடனடியாகப் பதவி விலகுகிறேன். கடந்த சில ஆண்டுகளாகக் கட்சி என்னை நம்பி அளித்த வாய்ப்புகளுக்கும் பொறுப்புகளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.
இனி திரு கென்னத் ஃபூவும் (Kenneth Foo) திரு அப்துல் ஷரிஃப்பும் இதர உறுப்பினர்களுடனும் தொண்டூழியர்களுடனும் சேர்ந்து மக்களின் நம்பிக்கையை மீண்டும் வெல்ல முயற்சி மேற்கொள்வர்.
நான் இளையர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழத் தவறியதை நினைத்து வருந்துகிறேன்.
எனது குடும்பத்துக்கும் அன்புக்குரியவர்களுக்கும் குறிப்பாக எனது கணவருக்கும் அம்மாவுக்கும் அவமானத்தை உண்டாக்கியதற்காகக் கவலைப்படுகிறேன்,"
எனத் திருவாட்டி நிக்கோல் சியா எழுதியிருந்தார்.
அதற்குத் திரு பிரித்தம் சிங் பதில் கடிதம் எழுதினார்.
"கட்சியின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறியதை ஒப்புக்கொண்டீர்கள். உங்கள் பதவி விலகலைக் கட்சி ஏற்றுக்கொள்கிறது. நேர்மையாக நடந்துகொள்வது முக்கியம்.
பாட்டாளிக் கட்சிக்கு நீங்கள் ஆற்றிய சேவைக்கு நன்றி.
இதுவரை பாட்டாளிக் கட்சியின் இளையர் பிரிவுக்குத் தலைமையேற்றதற்கு நன்றி,"என்றார் திரு பிரித்தம் சிங்.
mediacorp
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments