Ticker

6/recent/ticker-posts

மக்கள் தொகையில், இந்தியா சீனாவை மிஞ்சிவிட்டது!


இந்தியாவில் முஸ்லிம்கள் இருபது கோடியை எட்டியுள்ளனர்!

2023ம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 804.5கோடி என்று குறிப்பிட்டு,  ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளதோடு, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலையும் அது வரிசைப் படுத்தியுள்ளது.

அந்த வகையில் இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடியாக உள்ள நிலையில், சீனாவின் மக்கள் தொகை 142.56 கோடியாகும்.


இதன்படி,  சீனாவை விட இந்தியாவில் 30 லட்சம் பேர் அதிகம் வாழ்கின்றனர். அதனால் உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்திற்கு வந்துள்ளது.

 
2005ல் உலக மக்கள் தொகை  644 கோடியாக இருந்தபோது, சீனா 130 கோடியையும், இந்தியா 108 .2 கோடி மக்கள் தொகையையும் கொண்டிருந்தது.

1950ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் நிதியம் மக்கள்தொகை தரவுகளை சேகரித்து வெளியிடத் தொடங்கிய பிறகு முதல்முறையாக இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை பின்னுக்கு தள்ளியுள்ளது இதுவே முதற்றடவையாகும்.

இந்த நூற்றாண்டின் நடுவில் இந்தியாவின் இந்த எண்ணிக்கை 166.8 கோடியினை  எட்டுமென்றும், சீனாவின் மக்கள் தொகை 131.7 கோடியாகக்  குறையும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தற்போதைய கணக்கீட்டின்படி 2030ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 850 கோடியாகவும், 2050ம் ஆண்டில் 970 கோடியாகவும் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. உலகில் ஆயிரம் கோடி மக்கள் தொகை எண்ணிக்கை 2080-ம் ஆண்டில் எட்டப்படலாம் என்றும், இதே நிலை 2100 வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்தியாவில் 2023ல்  முஸ்லிம்களின் மக்கள் தொகை 19.7 கோடியாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் 14.2% முஸ்லிம்கள் இருந்துள்ளனர்.அப்போது முஸ்லிம்களின் மக்கள்தொகை 17.2 கோடியாகும்.

2020 ஜூலையில் மக்கள் தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையின்படி, 2023ல் எதிர்வு கூறப்பட்ட இந்திய மக்கள் தொகை 138.8 கோடியாகும். இதன்படி, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்த அதே 14.2% விகிதத்தைப் பயன்படுத்தினால், 2023-ல் முஸ்லிம்களின் மக்கள் தொகை 19.7 கோடியாக இருக்கும்!

-செம்மைத்துளியான்.


 



Post a Comment

0 Comments