

இவ்விவகாரம் தொடர்பாக மாணவியின் குடும்பத்தினர், மாணவர்களின் வீடு புகுந்து தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். இச்சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வரா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள், வேற்று சமூகத்தை சேர்ந்த சக மாணவியின் வாட்டர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் இன்றி அந்த மாணவியின் பேக்கில் காதல் கடிதத்தையும் மாணவர்கள் சிலர் வைத்துள்ளனர். இந்த விவகாரம் மாணவியின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.
இதனால், கொதித்தெழுந்த கிராம மக்கள், கையில் கம்பு கட்டைகளை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட மாணவரின் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளனர். தகவல் அறிந்து போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அப்போது போலீசார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதனால் அப்பகுதி களேபரமானது. கையில் கம்புகளை வைத்துக் கொண்டு ஒரு கும்பல் சுற்றுவதும், போலீசார் அவர்களை கலைக்க முயற்சிப்பதுமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மாணவியின் பாட்டிலில் சக மாணவர்களே சிறுநீரை கலந்து வைத்த விவகாரம் ராஜஸ்தானில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:- "மாணவி மதிய உணவுக்காக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பையை வகுப்பறையிலேயே வைத்து விட்டு சென்று இருக்கிறார். சாப்பிட்டு முடிந்த பிறகு வகுப்பறைக்கு வந்த மாணவி தனது பேக்கில் இருந்த வாட்டர் பாட்டிலில் தண்ணீர் என நினைத்துக் குடித்து இருக்கிறார்.
அப்போதுதான் வித்தியாசமான வாடை வந்துள்ளது. இதன்பிறகே சில மாணவர்கள், தண்ணீரில் சிறுநீரை கலந்து வைத்தது தெரிந்துள்ளது. இதனால் அதிர்ந்து போன மாணவி, பள்ளி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், பள்ளி முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் மாணவி வசிக்கும் கிராம மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், திங்கள்கிழமை பள்ளிக்கூடம் திறந்ததும் தாஷில்தார் மாற்றும் லுஹரரிய காவல் நிலையத்தில் கிராம மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், கோபம் அடைந்த கிராம மக்கள் , மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று சொல்லபப்டுகிறது. இந்த சம்பவத்தால் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
oneindia
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments