
கர்நாடகாவில் கோயில் பூசாரிகள் இணைந்து புதிதாக கட்டப்பட்ட மசூதியை திறந்து வைத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டம் குகானூர் தாலுகாவில் அமைந்திருக்கும் பனாப்பூர் என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு கோயில் பூசாரியான ஸ்ரீதர் முருடி மடத்தை சேர்ந்த பசவலிங்க சிவாச்சார்யா சுவாமிகள் மற்றும் அனந்தேஷ்வர் ஷகா மடத்தை சேர்ந்த மகாதேவயா ஆகியோர் புதிதாக கட்டப்பட்ட மசூதியை திறந்து வைத்துள்ளனர்.இந்த நிகழ்வு சமூக நல்லிணகத்திற்கு உதாரணமாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். மசூதி திறப்பு விழாவுக்கு வந்த பூசாரிகளுக்கு மசூதி நிர்வாகிகள் பூக்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் பசவலிங்க சிவாச்சார்ய சுவாமிஜி அளித்துள்ள பேட்டியில், நம்முடைய நடத்தைகள் இளம் தலைமுறைகளுக்கு ஓர் உதாரணமாக இருக்க வேண்டும்.
நாம் எல்லோரும் இப்படித்தான் இணக்கான வாழ வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் அமைதி நிலவும் என்று கூறியுள்ளார்.
மகாதேவயா சுவாஜி அளித்த பேட்டியில் கிராமங்களில் இந்துக்களும், முஸ்லிம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள். எல்லோரும் அனைத்து பண்டிகைகளை ஒற்றுமையுடன் கொண்டாடி மகிழ்கிறோம்.
இதுதான் நமக்கு பெருமை என்று கூறினார். முஸ்லிம் சமூக தலைவர் முகம்மது அலி கூறுகையில், முஸ்லிம் சமூகம் அமைதியை விரும்புகிறது. நாம் எல்லோரும் குகானூர் கிராமத்தில் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். எனவேதான் சுவாமிஜியை மசூதியை திறக்க அழைத்தோம் என்று கூறினார்.
As an act to send a message of peace and brotherhood, Hindu seer inaugurates mosque in #Karnataka's #Koppal district #trending #mosque pic.twitter.com/IHZYIwwL5a
— News18 (@CNNnews18) July 24, 2023
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments