குறள் 1127
கண்ணுள்ளார் காத லவராகக்
கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
எனக்குவயசு ஏழு!
நான்அக்கா!
தம்பிக்குவயசு அஞ்சு!
நான்பள்ளிக்கூடத்துல
இருந்து வந்தா
அவனோட விளையாடறதுல
நேரம்போறதே தெரியலம்மா!
குட்டித்தம்பி! செல்லத்தம்பி!
ஏங்கண்ணுக்குள்ளேய
இருக்கான்!
சரி! சரி! வா!
முகங்கழுவி மையெல்லாம்
தீட்டிக்கோ!
அடபோம்மா!
மைதீட்டுனா கண்ணுக்குள்ள
இருக்குறதம்பி
உருவம் மறஞ்சுறும்ல!
அதனால
மைதீட்டமாட்டேன்!
சூடான உணவா!
குறள் 1128
நெஞ்சத்தார் காத லவராக
வெய்துண்டல் அஞ்சுதும்
வேபாக் கறிந்து.
அம்மா
எனக்கெல்லாம்
சூடாசாப்பாடு தர்ற!
நீமட்டும் ஆறிப்போயி
சாப்பிடறியே! ஏம்மா?
அதுவாடா செல்லம்
உன்னை என்னோட
நெஞ்சுக்குள்ள
பத்திரமா வச்சிருக்கேனா
நான்சூடா சாப்டேனா
அதுஉன்ன சுட்ரும்ல!
அதனாலதான் நான்
ஆறுன சாப்பாடையே
சாப்புடுவேன்!
அதுஒருவகையான
பிள்ளப்பாசண்டா!
குறள் 1129
இமைப்பின் கரப்பாக்கு அறிவல்
அனைத்திற்கே ஏதிலர் எம்இவ்வூர்.
என்குழந்தைக்கு
உடல்நிலைசரியில்ல!
கண்இமைக்காம
தூங்காமபாத்துக்குறேன்!
கண்இமைத்தால்எங்கே
கண்ணுக்குள்ளஇருக்குறவன்
வெளியேபோய்ருவானோன்
பயமாஇருக்கு.
இந்தஊருஎன்னடான்னா
அவன்அதசெஞ்சு
இதசெஞ்சு
இழுத்து வச்சுக்கிட்டான்!
அதான் பாவம்இவ
தூங்கக்கூட முடியலன்
அவனையே குற்றம்சொல்லுது!
வேற வேலயேஇல்ல!
ஏந்தா இப்படியோ
குறள் 1130
உவந்துறைவர் உள்ளத்துள்
என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என் ம்இவ்வூர்.
ஏம்மா பேரன் சுற்றுலாபோயி
ரெண்டுநாளாச்சு!
என்னோட பேசலென்
நீயும் உங்கம்மாவும்
அக்கம்பக்கத்துல எல்லாம்
கேலிபண்றீங்க!
அவன் என்மனசுலே இருக்கான்!
உங்களுக்கு எங்க அதெல்லாம்
தெரியப்போகுது?
நீங்கதான்
பேரன் பேரன்
அலயறீங்க வாயமெள்றீங்க!
நாலுபேருக்குத் தெரியட்டும்.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments