குறள் 1001
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
தம்பி.. பணம் பணம் னு ஆலாப் பறக்கிறவனோட வீடு முட்ட அவன் சேத்த பணம் இருக்கும். ஆனா அதை அனுபவிக்க மாட்டான். மேல போய்ச் சேந்த பொறவு, அவன் பாடுபட்டு சேத்த சொத்து பத்தால அவனுக்கு என்ன பிரயோசனம் இருக்கும் தம்பி.
குறள் 1002
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
மாப்ள.. நம்மூர்ல கொஞ்ச பேரு பணத்தை வச்சு, யாரையும் அவங்க பக்கம் இழுத்துறலாம், எதையும் செஞ்சுக்கலாங்கிற நெனைப்புல சொத்து சேப்பானுவொ. அதுலயிருந்து வேற யாருக்கும் ஒதவ பத்து பைசா எளக்கமாட்டானுவொ. அவனுவொள்லாம் பணத்தாசை புடிச்ச இழி பிறவிகள் மாப்ள.
குறள் 1004
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
மருமவன.. நம்மூர்ல கொஞ்ச பயலுவொ இருக்கானுவொ. பிறத்தியாருக்கு சல்லிக்காசு கொடுக்க மாட்டானுவொ. வேற எந்த ஒதவியும் செய்ய மாட்டானுவொ. அதுனால ஊர்க்காரவொனுவொ எவனும் இவனுவொளை சட்டை பண்ண மாட்டானுவொ. இப்படிப்பட்ட பயலுவொளுக்கெல்லாம், அவனுவொ செத்த பொறவு எப்படிப்பட்ட பேரு இருக்கும். இதை நெனச்சு பாப்பானுவொளா மருமவன.
குறள் 1006
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.
மாப்ள.. வைய்க்கப் படப்புல கெடக்க நாய், தானும் வைக்கலை திய்ங்காது. மாட்டையும் திய்ங்க விடாது. இதை மாதிரி சில ஆளுங்க அவொட்ட இருக்க சொத்துக்களை, அவொளும் அனுபவிக்க மாட்டாவொ. தேவைப் படுதவொளுக்கும் கொடுத்து ஒதவ மாட்டாவொ. இப்படிப் பட்டவொ கிட்ட இருக்க பணம் லாம் அவொளுக்கு வந்துருக்க சீக்கு தான் மாப்ள.
குறள் 1008
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
மாப்ள... ஒருத்தங்கிட்ட நெறைய பணம் இருக்கலாம். ஆனா ஊர்ல இருக்கும் யாருக்கும் அவனை பிடிக்காது. அப்படிப்பட்டவன் கையில இருக்க பணம், ஊர் நடுவில இருக்க நச்சு மரத்துல காச்சு தொங்குத பழம் மாதிரி தான்.. யாருக்கும் சல்லிக் காசு பலன் கிடையாது மாப்ள.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments