Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-178


இர்வின், சிரோமி, செரோக்கி ஆகிய மூவரும் பூங்காவில்  பேசிக்கொண்டிருந்தபோது பாதையோரமாக மெதுவாக வந்து நின்ற மிதிவண்டியிலிருந்து இறங்கிய மனிதர் யோகியாரின் சாடையில் இருப்பதைக் கண்டதும், இர்வினும் செரோக்கியும் திகைத்துப் போயினர். 
நெருங்கி வந்தபோதுதான் அவர் உண்மையிலேயே யோகியார்தான் என்பது  ஊர்ஜிதமாகியது!

"குழந்தாய்.. என்னை அடையாளம் தெரிகிறதா?" வந்தவர் அமைதியாகக் கேட்டார்.

"பெரியவரே! உங்களை அடையாளம் தெரியாமற் போகுமா? விடியலின்போது குகையினுள் நான் எட்டியவேளை நீங்கள் காரியமொன்றில் தீவிரமாகி இருந்தீர்கள்; அதனால் உங்களோடு பேசாமல்  வந்துவிட்டேன்! அது சரி,  நீங்கள் ஏன்  இங்கே வந்தீர்கள்? இவ்வளவு தூரம் எப்படி உங்களால் வர முடிந்தது?" செரோக்கி இடைவெளியின்றிக் கேள்விகள் பல தொடுத்தான்.

"அதோ தெரிகிறதே மிதிவண்டி. அதில்தான்  வந்தேன். நான் இங்கு வருவது இது முதல் தடவையுமல்ல;  இதற்கு முதலில் பல தடவைகள் வந்துள்ளேன்" யோகியார் பெருமைபடக்  கூறினார்.

"மிதிவண்டி உங்களுக்கு எப்படி வந்தது?" இர்வின் இடை மறித்தான்.

"குகைக்குப் பின் பக்கமாக இருக்கும் ஓடைக்கருகிலுள்ள கல்லிடுக்கிலிருந்தது!"

செரோக்கிக்கு புரிந்து விட்டது. தான் புரிந்ததை  விலாவாரியாக இர்வினுக்குப் பிறகு கூறிக்கொள்ளலாம் என்று அவன் மௌனம் காத்தான்.

சிரோமியை யோகியாருக்கும், யோகியாரை  சிரோமிக்கும் இர்வின் அறிமுகப்படுத்தி வைத்தான்!

"எழுபது வருடங்களாக 'கல்லடிவாரம்' என்ற இடத்தில் வாழ்ந்துவந்த ஒரு மனிதர் பற்றி உன்னிடம் குறிப்பிட்டிருந்தேனே; அவர் இவர்தான்!" என்று கூறிய  இர்வின், பகல்போஷணத்துக்காக உணவகமொன்றுக்கு அவர்களைக் கூட்டிச் செல்வதற்காக வாகனத்தை நாடிச் சென்றான் இர்வின்! தொடர்ந்து வந்த மூவரில், இருவர் வாகனத்தில் ஏறிக்கொள்ளயோகியார் மட்டும் ஏற மறுத்து விட்டார்!

(தொடரும்)


 



Post a Comment

0 Comments