Ticker

6/recent/ticker-posts

முகவுரை எழுதியவன் நீ!

 
இலக்கற்றவளுக்கொரு
முகவுரை எழுதியவன் நீ....
இலக்கணத்துடன்
அகவுரையொன்று எழுத
முயல்கிறேன் ....
இன்றும்...

வார்த்தைகளில்  
உறைத்திட முடியாமல்
நம் உறவை
அரவணைத்து கசிகிறது
வரிகள்.....

வேறெந்தப் பெண்ணுக்கும்
கிடைத்திராத 
பெருவரம் நீயென்பதால்
இப்போதென்  
பிரார்தனைகளெல்லாமே
இவ்வண்ணமே
நம் உறவு
இறுதிவரை
தொடர்ந்திருக்கவே....


ருக்ஸானா நயீம்


 



Post a Comment

0 Comments