குறள் 172.
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
யாரையும் கண்ணை மூடிக்கிட்டு ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்யாம நடு நிலைமையோடு இருக்கணும்னு நெனைய்க்கவொ நமக்கு ஒரு பலன் கிடைக்குமேன்னு நெனய்ச்சு எந்தக் காலத்துலயும் பழி வரக்கூடிய சங்கதிகளைச் செய்ய மாட்டாவொ.
குறள் 173.
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
நல்ல வழியில வரக்கூடிய நிலையான இன்பத்தை விரும்புத பெரியவக, ஒரு போதும், ஒடனே பயன் வருதேன்னு நெனச்சு கெட்ட வழியில் நடக்க மாட்டாக.
குறள் 174.
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
எல்லா புலன்களையும் அடக்கி வாழத் தெரிஞ்சவொ, பட்டினியாக் கெடந்தாக் கூட கெடப்பாவொளே ஒழிய அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பட மாட்டவொ.
குறள் 175.
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
யார்கிட்டன்னாலும் சரி, அவொளோட பொருள் மீது ஆசைப்பட்டு, எவனாவது அதை அமுக்கப் பாத்தா, அவங்கிட்ட இருக்க அறிவு இருந்தா என்ன இல்லாட்டா என்ன?
குறள் 176.
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
நல்ல அருளோட இருக்கணும்னு நெனச்சு நல்ல வழியில் நடப்பவொ, அடுத்தவன் பொருளுக்கு ஆசைபட்டு தப்பான வழியில் நடந்தாக்கா, அவொ கெட்டு சீரழிஞ்சு போவாவொ.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments