Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-31


151. வினா : பொறுமைக்கு எடுத்துக்காட்டு எது?
விடை: நிலம்
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.151

152. வினா : வறுமையிலும் வறுமை எது?
விடை : விருந்தினரைப்புறக்கணிப்பது 
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.153

153. வினா : வலிமையிலும் வலிமை எது?
விடை: அறிவிலார் செயலைப் பொறுப்பது 
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.153

154. வினா : நிறையுடைமை நீங்காது எப்போது?
விடை: பொறுமையைப் போற்றி வாழும்போது 
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும்.154

155. வினா துறவியினும் தூய்மையானவர் யார்?
விடை: பிறரின் கடுஞ்சொற்களையும் பொறுத்தவர் 
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்.159

(தொடரும்)


 



Post a Comment

0 Comments