Ticker

6/recent/ticker-posts

குவியல்!


அவளுக்கு அப்பொழுது 
பதினாறு வயதிருக்கும்
கருப்பு டாப்சட்டை அணிந்ததால் 
என்னவோ அவள் 
கண் பூனையிடம்
கண்களை கடன் வாங்கி விட்டது
பச்சையம்மாளெனவே
அனைவரும் அழைப்பர்
அவள் சாயலைப் பெற்றதாலோ 
அம்மையென்றே இவளழைப்பாள்
சாக்கெட் போட இயலாமல்
துவண்டுப் போன மார்பகத்துடன்
குத்தவைத்து அமர்ந்திருப்பாள்
மகளின் வாசல் மூலையிலே
ஒரு்முழம் மண் குவித்து
பொத்தென பற்றிய
பேரப்பிள்ளைகளின் பத்து 
விரல்களில் சிக்கிக் கொண்டது
பதினாறில் மாமனுடன் ஆடிய
கிச்சு கிச்சு தாம்புலத்தின் 
ஆசைக்குச்சி

சே கார்கவி கார்த்திக்
நாகப்பட்டினம்


 



Post a Comment

0 Comments