Ticker

6/recent/ticker-posts

இங்கிலாந்து அரச குடும்பத்தை துரத்தும் புற்றுநோய்... அன்றே கணித்த நாஸ்ட்ராடாமஸ்!


Nostradamus Prediction 2024: 15ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் நாஸ்ட்ராடாமஸ். இவர் அந்த காலத்தின் மிகப்பெரிய தீர்க்கத்தரிசி என உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறார். இவரின் எதிர்காலத்தை  நோக்கிய கணிப்புகள் பல நிகழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

குறிப்பாக,  பிரஞ்சு புரட்சிக்கு காரணமான நெப்போலியனின் எழுச்சி, ஹிரோஷிமா மீதான அணுகுண்டுவீச்சு, 2024இல் முடியாட்சிக்கு கடினமான காலமான இருக்கும் என்பது இவரின் கணிப்புகளில் இடம்பெற்று, அவை நிகழ்ந்தும் இருக்கின்றன என கூறப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு உயிரிழந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தையும் இவர் கணித்ததாக கூறப்படுகிறது. 

பதவியில் இருந்து விலகுவாரா அரசர் சார்லஸ்?

இவர் தற்போது இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் இங்கிலாந்து அரசு குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசியான கேட் மிடில்டன் ஆகியோருக்கு தற்போது ஏற்பட்டுள்ள உடல்நலப் பிரச்னைகளை நாஸ்ட்ராடாமஸ் மற்றும் நவீன நாஸ்ட்ராடாமஸ் ஆகியோரால் கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இருவருக்கும் சமீபத்தில் புற்றுநோய் இருப்பது தெரியவந்த நிலையில், இதுபோன்ற சம்பவம் நடக்கும் என 15ஆம் நூற்றாண்டிலேயே நாஸ்ட்ராடாமஸ் கணித்து எழுதிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து அரசரான சார்லஸ் புரோஸ்டேட் வீக்கத்திற்கு சிகிச்சை பெறும்போது அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து, தானாக முன்வந்தோ அல்லது உடல்நிலை காரணமாகவோ அவர் அரசர் பதவியில் இருந்து விலகுவார் என ஊகங்கள் கிளம்பின. இருப்பினும், இளவரசர் ஹாரி அரசப் பணியில் பெரிதாக அக்கறை காட்டாத நிலையில் அவர் அரசராக பதவியேற்பதும் நடக்காத காரியமாக தெரிகிறது. 

நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு 

இது ஒருபுறம் இருக்க, இளவரசி கேட் மிடில்டன் தனது உடல்நிலை குறித்து தற்போது வெளியுலகிற்கு தெரிவித்துள்ளார். அதாவது தற்போது அவர் புற்றுநோய் உடன் போராடி வருவதாகவும், இதற்கு முன் புற்றுநோய் அல்ல என நம்பப்பட்ட பிரச்னைக்காக தான் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறினார். இளவரசி கேத்ரின், இளவரசர் வில்லியமின் மனைவி ஆவார். 

இந்நிலையில், நாஸ்ட்ராடாமஸ் 15ஆம் நூற்றாண்டில் எழுதியதாக கூறப்படும் குறிப்பில், ஒரு அரசர் தனது பதவியில் இருந்து விலகுவார் என்றும் யாருமே எதிர்பார்க்காத வாரிசு பதவியில் அமர்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னரே கூறியது போன்று இது இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் இளவரசர் ஹாரி குறித்த கணிப்புதான் எனவும் கூறப்படுகிறது. 

யார் அந்த நவீன நாஸ்ட்ராடாமஸ்?

அதேபோல, நவீன கால நாஸ்ட்ராடாமஸ் என்றழைக்கப்படும் அதோஸ் சலோமி என்பவர் ஏற்கெனவே கேட் மிடில்டன் உடல்நிலை குறித்து கணித்துள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த 36 வயதான அதோஸ் சலோமி இதற்கு முன் கொரோனா பெருந்தொற்று குறித்தும், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவது குறித்தும் கணித்துள்ளார். அதேபோல், இளவரசி கேட் எலும்பு, முட்டி, கால் போன்றவற்றில் பிரச்னையை சந்திப்பார் என கணித்துள்ளார். மேலும், இளவரசியின் முதன்மையா சவால் அரச குடும்பத்தின் எதிர்கால பங்கில் உள்ளதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

zeenews


 



Post a Comment

0 Comments