Ticker

6/recent/ticker-posts

ஒரு தோல்வியால் அஃப்ரிடிக்கு டாட்டா காட்டிய பாகிஸ்தான்.. வருங்காலத்துக்காக ரிவர்ஸ் கியரில் அதிரடி முடிவு


சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக கருதப்படும் பாகிஸ்தான் கடந்த சில வருடங்களாகவே தொடர் வெற்றிகளை பெறுவதற்கு திணறி வருகிறது. குறிப்பாக 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் பரம எதிரி இந்தியாவிடம் தோல்வியை சந்தித்த அந்த அணி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறியது. இந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று அனைத்து விதமான கேப்டன்ஷிப் பொறுப்புகளையும் பாபர் அசாம் ராஜினாமா செய்தார். 

அதைத் தொடர்ந்து ஷான் மசூட் மற்றும் ஷாஹீன் அப்ரிடி ஆகியோரை டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாகிஸ்தான் வாரியம் அறிவித்தது. ஆனால் அப்போதும் எந்த மாற்றத்தையும் சந்திக்காத பாகிஸ்தான் அணி ஷான் மசூத் தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும், ஷாஹீன் அப்ரிடி தலைமையில் நியூசிலாந்து மண்ணில் 4 – 1 (5) என்ற கணக்கில் டி20 தொடரிலும் தோல்வியை சந்தித்தது. 

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 பிஎஸ்எல் தொடரில் ஷாஹீன் அப்ரிடி தலைமையிலான லாகூர் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட பெறாமல் வெளியேறியது. அதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டன்ஷிப் பதவியிலிருந்து ஷாஹீன் அப்ரிடி தற்போது நீக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு பதிலாக பாபர் அசாம் மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் 18 முதல் 27 வரை நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் விளையாட உள்ளது. அந்த தொடரிலிருந்து மீண்டும் பாபர் அசாம் கேப்டனாக செயல்படுவார் என்று மோசின் நக்வி தலைமையிலான புதிய பாகிஸ்தான் வாரியம் அறிவித்துள்ளது. 

இதே காரணத்தால் 2024 டி20 உலகக் கோப்பையிலும் பாபர் அசாம் பாகிஸ்தானின் கேப்டனாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் 90% பிரகாசமாகியுள்ளது. 

அந்த வகையில் ஷாஹீன் அப்ரிடியை புதிய கேப்டனாக நியமித்த பாகிஸ்தான் வாரியம் முழுமையாக 2 மாதம் கூட நம்பி வாய்ப்பு கொடுக்காமல் ஒரு தொடரில் தோல்வியை சந்தித்ததும் கழற்றி விட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே பாபர் அசாம் தலைமையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பை போன்ற தொடர்களில் பாகிஸ்தான் தோல்விகளையே சந்தித்தது. 

அப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் அவரையே பாகிஸ்தான் வாரியம் கேப்டனாக அறிவித்துள்ளது ஒரு தரப்பு ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு முன்னோக்கி நகர வேண்டிய பாகிஸ்தான் வாரியம் மீண்டும் பாபர் அசாமை கேப்டனாக அறிவித்து ரிவர்ஸ் கியரில் செல்வதாக ரசிகர்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

crictamil


 



Post a Comment

0 Comments