Ticker

6/recent/ticker-posts

நிழல் படர்ந்து கனக்கிறது நிலம்!


ஒரு காக்கை அமர்ந்து
இலை உதிரும் பொழுதெல்லாம்
கடல் பறந்து துள்ளும்
மீனின் குணம்

விதை விழுந்து
நிழல் முளைக்கிறது
புழு நகர்கையில்
நத்தையின் சாயல்

அவள் பெயர் மேலும்
எனது பெயர் கீழும்
அடிக்கோடிடுகிறது
மரம் கிழித்த காதல்

கிளைகள் மேலெழும்ப
இலைகளை கைக்கோர்கிறது
பூக்கள் உதிரும் பொழுது
சருகென மாறுகிறது மரம்

வழிப்போக்கரின் பயணத்திற்கு
மாளிகையானது மரத்தின் நிழல்
அரிவாள் கொண்டு அமர்கையில்
நிழல் படர்ந்து கனக்கிறது நிலம்

சே கார்கவி கார்த்திக்
நாகப்பட்டினம்


 



Post a Comment

0 Comments