Ticker

6/recent/ticker-posts

காரணப்பெயர்!


" அன்பானவன்" 
எனும் பெயரை அடைய
சிலரின் நட்பு போதுமானது

" பணிவானவன் "
எனும் பெயரை அடைய
சில பெரியோரின் 
பழக்கம் போதுமானது

" கருணையுள்ளவன்"
எனும் பெயரை அடைய
சில துன்ப நிகழ்வுகளை
சந்தித்தால் போதுமானது

" நேர்மையாளன் " 
எனும் பெயரை அடைய
சில ஆழமான செயல்பாடுகள்
போதுமானது

" நல்லவன் " 
எனும் பெயரை அடையத்தான்
ஆயுளில் அதிக பொழுதுகளை
விரயம் செய்ய வேண்டிவரும்  

இந்த பண்பு பெயர்களின்
எல்லா முகமும்
நொடிப்பொழுதில் 
நிர்மூலமாக

போதுமானதாக இருக்கும்
" குடிகாரன் " எனும்
ஒற்றை காரணப்பெயர்.

ஐ.தர்மசிங்
நாகர்கோவில் 


 



Post a Comment

0 Comments