Ticker

6/recent/ticker-posts

13.4 ஓவரிலேயே ஹைதராபாத்தை அதன் ரூட்டில் ஓடவிட்ட கொல்கத்தா.. கடைசி 6 ரூட்டில் ஃபைனல்.. அப்டினா கோப்பை ஃகன்பார்ம்


ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் குவாலிபயர் 1 போட்டி மே 21ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் முதல் ஓவரிலேயே மிட்சேல் ஸ்டார்க் வேகத்தில் டக் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே மற்றொரு அதிரடி துவக்க வீரர் அபிஷேக் சர்மாவும் 3 ரன்களில் வைபவ் அரோரோ வேகத்தில் அவுட்டானார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த நித்திஷ் ரெட்டியை 9 ரன்களில் காலி செய்த ஸ்டார்க் அதற்கடுத்ததாக வந்த சபாஷ் அகமதை கோல்டன் டக் அட்டாக்கினார்.

அதனால் 39/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஹைதராபாத் அணிக்கு 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹென்றிச் கிளாசின் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை ஓரளவு சரி செய்தனர். இருப்பினும் அதில் க்ளாஸென் 32 (21) ரன்களில் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கினார். அதற்கடுத்த சில ஓவரில் மறுபுறம் அட்டகாசமாக விளையாட திரிபாதி 55 (35) ரன்களில் ரன் அவுட்டானார்.

இறுதியில் கேப்டன் பட் கமின்ஸ் 30 (24) ரன்கள் எடுத்தும் 19.3 ஓவரில் ஹைதராபாத்தை 159 ரன்களுக்கு சுருட்டிய கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 160 ரன்களை துரத்திய கொல்கத்தா அணிக்கு 44 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ரகமனுல்லா குர்பாஸ் 23 (14) ரன்களில் நடராஜன் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவரில் மறுபுறம் தடுமாறிய சுனில் நரேன் 21 (16) ரன்களில் கேப்டன் கமின்ஸ் வேகத்தில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஹைதராபாத் பவலர்களை அதிரடியாக எதிர்கொண்டனர். போதாக்குறைக்கு இந்த ஜோடி கொடுத்த சில கேட்ச்களை ஹைதராபாத் கோட்டை விட்டது.

அதைப் பயன்படுத்தி அடுத்து நொறுக்கிய இந்த ஜோடியில்,வெங்கடேஷ் 51* (28) ரன்களும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 58* (24) ரன்களும் குவித்து அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 13.4 ஓவரிலேயே 164/2 ரன்கள் குவித்த கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று சென்னையில் நடைபெற உள்ள ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

மேலும் 2012, 2014, 2021 ஆகிய வருடங்களை தொடர்ந்து 4வது முறையாக ஃபைனலுக்கு கொல்கத்தா தகுதி பெற்றது. குறிப்பாக 2018, 2019, 2020, 2021, 2022, 2023 ஆகிய கடைசி 6 வருடங்களில் குவாலிபயர் 1 போட்டியில் வென்ற அணி கோப்பையும் வென்றுள்ளது. அதனால் இம்முறை கோப்பையை வெல்வோம் என்று கொல்கத்தா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மறுபுறம் போராடாமலேயே தோற்ற ஹைதெராபாத் எலிமினேட்டரில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.

crictamil



 



Post a Comment

0 Comments