திருமணம் நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு, உடல்ரீதியாக தான் ஒரு ஆண் என கூறி, மணப்பெண் ஒருவர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 27 வயதான லி யுவானுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, சீனாவில் திருமணத்திற்கு முன்பு வழக்கமாக நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனையில், அவர் உடல்ரீதியாக ஆணாக இருப்பது தெரியவந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, 16 வயதில் பருவம் எய்திய லி யுவானுக்கு, அடுத்த சில மாதங்களிலேயே மாதவிடாய் முழுமையாக நின்றதோடு, மார்பகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளிலும் பெண்ணுக்கான வளர்ச்சி ஏற்படவில்லை. இதனால், கவலையடைந்த அவர், மருத்துவமனைக்கு சென்றபோது, அவரின் வயிற்றுப் பகுதியில், ஆண்களுக்கான விதைப்பை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மேற்கொண்டு மருத்துவ ஆய்வு செய்யும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும், அப்போது அவர் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
தற்போது 27 வயதாகும் அவர் திருமணத்திற்கு முன்பு மருத்துவப் பரிசோதனை செய்த நிலையில், அவர் உடல்ரீதியாக ஆணாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அவர் மட்டுமின்றி, மணமகன் மற்றும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, திருமணம் நிறுத்தப்பட்ட நிலையில், லி யுவான் வயிற்றுப் பகுதியில் இருக்கும் விதைப்பையால் புற்றுநோய் ஆபத்து இருப்பதாக, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, அதை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியுள்ள லி யுவான், இனி ஆணாக வாழ்வதா, பெண்ணாக வாழ்வதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments