Ticker

6/recent/ticker-posts

ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!


உலக பத்திரிகை சுதந்திர நாள் (03.05.24) அன்று, ஊடக சுதந்திரத்தை பறிக்கும் பா.ஜ.க அரசின் நடவடிக்கையை தரவரிசைப் படுத்தியுள்ளது Press Freedom Index.

எல்லைகளற்ற நிரூபர்கள் அமைப்பு (Reporters Without Borders) வெளியிட்டுள்ள பத்திரிகை சுதந்திர குறியீடு (Press Freedom Index), ஜனநாயகத்தன்மையை இழக்கும் நாடுகளை தரவரிசைப் படுத்தியுள்ளது, அதில் மொத்தம் இடம் பெற்றுள்ள 176 நாடுகளில் 159ஆவது இடத்தைப் பெற்றுள்ளது இந்தியா.

159 ஆவது இடத்தை பெற்றதற்கு காரணங்களாக,“2014-ல் ஆட்சியை பிடித்த பா.ஜ.க, அம்பானியுடனும், அதானியுடனும் இணைந்து ஊடகங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது.

இதனால், அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திடம் உள்ள சுமார் 70 ஊடகங்களையும், அதானியிடம் உள்ள NDTV ஊடகத்தையும், பா.ஜ.க.வின் ஊடகமாக, ‘கோ(மோ)டி ஊடகமாக’ மாற்றம் பெற்றுள்ளது.

இந்த முதன்மை ஊடகங்களால் சுமார் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், தவறான செய்திகளை படிக்க நேர்கிறது.

மேலும், இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறை அதிகரித்துள்ளது. ஊடகங்களின் நடுநிலைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளது” என RSF தெரிவித்துள்ளது.

தரவரிசைப் பட்டியலில், அண்டை நாடுகளான, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள், இந்தியாவை விட அதிக பத்திரிகை சுதந்திரம் வழங்கும் நாடுகளாக இருக்கின்றன என்பதும் RSF வெளியிட்டுள்ள குறியீட்டின் வழி அம்பலாமியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பா.ஜ.க.வின் ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கவுரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சித்திக் கப்பன், ரானா உள்ளிட்ட நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல்கள் குவிந்து, உண்மை மறைக்கப்படுகிறது.

இது, இந்தியாவின் ஜனநாயகத்தன்மையை மோசமாக்கியுள்ளது. எனவே, நாம் பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை காக்க, கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க - பத்திரிகை சுதந்திரத்தை எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க, அதற்கு தடையாக இருக்கும் இந்தியா கூட்டணி, ஊடக சுதந்திரத்தை நிலைநாட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.


kalaignarseithigal

Post a Comment

0 Comments