Ticker

6/recent/ticker-posts

சிறையில் அடைக்கப்படுவார் என அப்பட்டமாக மிரட்டும் மோடி : “உங்களால் என்னை தொட கூட முடியாது” தேஜஸ்வி பதிலடி!


கடந்த 2019 மக்களவை தேர்தலில், பீகாரின் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜ.க கூட்டணி, தற்போதைய தேர்தலில் அந்த வெற்றியில் பாதியை பதிவு செய்வதே கடினம் என்கிற அளவிற்கு,

இந்தியா கூட்டணி கட்சிகளில் ஒன்றான, இராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியின் மூத்த தலைவர் மற்றும் பீகார் மாநில மாநில முன்னாள் முதல்வர் தேஜஸ்வியின் பிரச்சார ஓட்டம் அமைந்துள்ளது.

இவருக்கு 34 வயதே நிரம்பியிருந்தாலும், தொடர் பிரச்சாரங்களால், உடல் சோர்வுற்று, நகரும் நாற்காலிகளில் அமர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஊக்கமளிக்கும் வகையில், மக்கள் திரளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதனால், தோல்வியை கண்முன் கண்ட மோடி, தனது தேர்தல் பிரச்சாரத்தில், “பீகார் முன்னாள் முதல்வர் தேஜஸ்வி, தனது ஹெலிகாப்டர் பயணங்களை முடித்துகொண்ட பின், சிறைக்கு செல்ல ஆயத்தமாவார்” என அப்பட்டமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “மோடி தெரிவித்திருப்பது, தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது மட்டுமல்லாமல், ஒன்றிய விசாரணைக்குழுக்கள் மோடியின் கீழ் மட்டுமே செயல்படுகிறது, தேர்தல் ஆணையம் அதற்கெதிரான நடவடிக்கை எடுக்காது என்பனவற்றை உறுதிபடுத்துகிறது. எந்த தேசத்திற்கும் இது போன்ற நிலை வரக்கூடாது” கடுமாக, தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இதனையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொண்ட தேஜஸ்வி, மோடியின் மிரட்டலுக்கு பதிலளிக்கும் வகையில், “மோடியால் என்னை தொடமுடியாது. தொட முயன்றால் அவருக்கு ஒன்றை நினைவுகூற விரும்புகிறேன். இது டெல்லியோ, ஜார்கண்டோ இல்லை, பீகார்!” என சவால் விட்டுள்ளார்.

இந்நிலையில், மோடி தனது பொய்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில், இன்று (27.05.24) பிரச்சாரங்களில் ஈடுபடாமல் ஓய்வு எடுத்துள்ளதனால், சில மணிநேரம் பொய் மற்றும் வெறுப்புகளிலிருந்து விடுப்பு கிடைத்துள்ளதாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது X தள பக்கத்தில் கேலியாக பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

kalaignarseithigal


 



Post a Comment

0 Comments