இந்தியாவில் இளைஞர் ஒருவர் மதுபானம் அருந்திவிட்டுக் காரை ஓட்டிய சம்பவத்தில் இருவர் மாண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அதற்குத் தண்டனையாக இளைஞர் கட்டுரை எழுதவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அந்த 17 வயது இளைஞருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று பலரும் கோருவதாக CNN செய்தி நிறுவனம் தெரிவித்தது.
புனே (Pune) நகரில் இளைஞர் ஓட்டிக்கொண்டிருந்த Porsche கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் இருவர் மாண்டதாக மகாராஷ்டிர (Maharashtra) மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis) கூறினார்.
கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவர் 15 நாள்கள் சமூக சேவை செய்யவேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது.
சாலைப் பாதுகாப்பைப் பற்றி கட்டுரை எழுதும்படி உத்தரவிடப்பட்டதாகவும் CNN தெரிவித்தது.
இளைஞருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து மக்கள் சினங்கொண்டபோது அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை அவர் மறுவாழ்வு சிகிச்சை இல்லத்தில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டது.
இன்னும் 18 வயது ஆகாத மகனைக் கார் ஓட்ட அனுமதித்த சந்தேகத்தில் இளைஞரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞருக்கு மதுபானம் தந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக CNN தெரிவித்தது.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments