111/3 டூ 134/8.. நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம்.. எதிரி இலங்கையை வீட்டுக்கு அனுப்பிய சம்பவம்.. சூப்பர் 8 சென்றதா?

111/3 டூ 134/8.. நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம்.. எதிரி இலங்கையை வீட்டுக்கு அனுப்பிய சம்பவம்.. சூப்பர் 8 சென்றதா?


ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 13ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸின் செயின்ட் வின்சென்ட் நகரில் 27வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த போட்டியில் குரூப் டி பிரிவில் இடம் வகிக்கும் நெதர்லாந்து மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்துக்கு கேப்டன் சாண்டோ 1, லிட்டன் தாஸ் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் அடுத்ததாக வந்த அனுபவ வீரர் சாகிப் அல் ஹசன் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினார். அவருடன் சேர்ந்து மறுபுறம் தம்முடைய பங்கிற்கு அசத்திய மற்றொரு துவக்க வீரர் தன்சித் ஹசன் 35 (26) ரன்களில் அவுட்டாகி சென்றார். அடுத்ததாக வந்த தவ்ஹீத் ஹ்ரிடாய் 9 ரன்களில் அவுட்டானாலும் முகமதுல்லா முக்கியமான 25 (21) ரன்கள் எடுத்தார்.

இறுதியில் எதிர்புறம் அரை சதமடித்த சாகிப் கடைசி வரை அவுட்டாகாமல் 64* (46) ரன்களும் ஜாகிர் அலி 14* (7) ரன்களும் எடுத்தனர். அதனால் 20 ஓவரில் வங்கதேசம் 159/5 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக வேன் மீக்ரன் 2, ஆர்யன் தத் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 160 ரன்களை துரத்திய நெதர்லாந்துக்கு துவக்க வீரர்கள் லேவிட் 18 (16), மேக்ஸ் ஓ’தாவுத் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதே போல மிடில் ஆர்டரில் விக்ரம்ஜித் சிங் அதிரடியாக விளையாடி 26 (16) ரன்களிலும் எங்கல்பேர்ச்ட் 33 (22) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் பஸ் டீ லீடி டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் நிதானமாக விளையாடிய கேப்டன் எட்வர்ட்ஸ் 25 ரன்களில் நடையை கட்டினார்.

இறுதியில் லோகன் வேன் பீக் 2, டிம் பிரிங்கில் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் ஆரியான் தத் 15* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் நெதர்லாந்து 134/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக 14.3 ஓவரில் 111/3 என்ற நல்ல நிலையில் இருந்த அந்த அணி கடைசி 33 பந்துகளில் வெறும் 23 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை கோட்டை விட்டது.

அதனால் 25 ரன்கள் தேசத்தில் வென்ற வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக தஸ்கின் அகமது 2, ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதையும் சேர்த்து 2வது வெற்றியை பதிவு செய்த வங்கதேசம் குரூப் டி பிரிவில் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. எனவே கடைசி போட்டியில் வென்றால் சூப்பர் 8க்கு செல்லலாம் என்ற நல்ல நிலைக்கு வங்கதேசம் வந்துள்ளது.

இந்த வெற்றியால் தங்களுடைய எதிரியான இலங்கை அணியை வங்கதேசம் வெளியேற்றியுள்ளது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் சுற்றை தாண்டாமலேயே 2014 சாம்பியன் இலங்கை அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறியது.

crictamil


 



Post a Comment

Previous Post Next Post