Ticker

6/recent/ticker-posts

மச்சாண வரச் சொல்லுங்ளேன்!


முன்னால வேகமாய்ப் 
போற முனியண்ணா
நீயும் என் 
கதையக் கேளண்ணா

கன்னாபின்னா ஏங்கிறேன் 
கண்ணால நோக்குறேன்
கருக்கல் அடங்கிய 
பின்னாலும் காத்திருக்கிறேன்

கந்துவட்டி  அத்தானுக்காக
தன்னாலே கலங்குறேன்
ஆலங்கட்டி மழையோடு 
ஆலங்குடி போனவரு

ஆறேழுநாளாச்சி
காணாம தேடுது மூச்சி  
வாடுது மஞ்சம் 
நோகுது நெஞ்சம்

தஞ்சாவூர் சந்தையிலே 
வாஞ்சிநாதன் கடையிலே
மச்சாண கண்டாக்கா 
வரச் சொல்லுங்ளேன்

ஆர் எஸ் கலா 



 



Post a Comment

1 Comments

  1. நன்றிகள் அண்ணா எப்போதும் என் பதிவுகளுக்கு முன் உரிமை கொடுத்து உடனுக்குடன் பதிவு செய்து விடுவீங்க மகிழ்ச்சி அண்ணா 💐💐

    ReplyDelete