யார் இந்த அசோக் எல்லுசாமி? எலான் மஸ்க் எக்கச்செக்கமா பாராட்ட காரணம் என்ன?

யார் இந்த அசோக் எல்லுசாமி? எலான் மஸ்க் எக்கச்செக்கமா பாராட்ட காரணம் என்ன?


ஞாயிற்றுக்கிழமை எலான் மஸ்க் தனது ட்விட்டர் பதிவு ஒன்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் எல்லுஸ்வாமி என்ற டெஸ்லா ஊழியருக்கு நன்றி தெரிவித்துள்ளார். டெஸ்லாவின் ஆட்டோ பைலட் குழுவில் பணிக்குச் சேர்ந்த முதல் நபர் அவர் என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

டெஸ்லாவின் AI தொழில்நுட்பத்தில் வெற்றி பெற்றதற்கு அந்நிறுவனத்தின் AI மென்பொருளை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்த அசோக்கும் அவரது குழுவினரும் தான் காரணம் என எலான் மனதாரப் பாராட்டியுள்ளார்.

அசோக்கின் ட்வீட் ஒன்றை ரீ-ட்வீட் செய்து பதிவிட்டுள்ள எலான் மஸ்க், “நன்றி அசோக்! டெஸ்லா AI / ஆட்டோ பைலட் குழுவில் இணைந்த முதல் நபர் அசோக். இறுதியில் அனைத்து ஏ.ஐ. ஆட்டோ பைலட் மென்பொருட்களுக்கும் அவரே தலைமை தாங்கினார். அவரும் எங்கள் அற்புதமான குழுவும் இல்லாமல் போயிருந்தால், பத்தோடு பதினொன்றாக நாங்களும் இருந்திருப்போம்" என எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.

அசோக் எல்லுசுவாமி, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தில் AI மற்றும் ஆட்டோ பைலட் குழுவின் முக்கியமான இயக்குநராக இருந்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு சிறிய அளவில் ஆட்டோ பைலட் திட்டம் தொடங்கியபோது டெஸ்லாவில் பணிக்குச் சேர்ந்தார். 2015 இல், தடைகளைத் தாண்டி டெஸ்லா உலகின் முதல் ஆட்டோ பைலட் அமைப்பை உருவாக்கியது.

பிறகு டெஸ்லா நெட்வொர்க்குகளை திறமையாகக் கையாளுவதற்காக பிரத்யேகமான சிலிக்கானை தயாரிக்கத் தொடங்கியது. முதலில் 2017 இல் வடிவமைக்கப்பட்ட இந்த சிலிக்கான், பிப்ரவரி 2019 இல் உற்பத்திக்கு வந்தது.

இதன் தொடர்ச்சியாக 2021இல் டெஸ்லாவில் மனித உருவ ரோபோக்கள் தொடர்பான ஆராய்ச்சி தொடங்கியது. ChatGPT மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு இப்போது போல பெருகாத சூழல்நிலையிலேயே டெஸ்லா இந்தச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் எல்லுசாமியின் பங்கு முக்கியமானதாக இருந்துள்ளது.

asianetnews


 



Post a Comment

Previous Post Next Post