ராஜகுமாரியின் சுயம்வரம்-41

ராஜகுமாரியின் சுயம்வரம்-41


என்ன நினைத்தானோ சாடரென உள்ளே போய் விட்டான். அவன் போனதும் இவர்கள் மூவரும் பேசிக் கொண்டார்கள். "ஏனோ 
நம்மளை நின்று முறைத்துப் பார்த்தான் ."என காந்தன் கூற சின்ன மருமக சொன்னாள் .

"அண்ணா அவன் பார்வையே அப்படித்தானோ? முட்டைக்கண்ணன் கவனிச்சிங்கள?" என்றாள். 

காந்தன் சிரித்துக் கொண்டான் .

மேரி அக்கா சொன்னார் ."அடியேய் இப்படியே நீ நொடு நொடு என்று பேசித்தானே உன் புருசனிடம் வாங்கி கட்டுற.கொஞ்சம் கூட வாயை அடக்க மாட்டாயா?" என்றார். 

ஏன் அக்கா இப்படி சொல்லுறாய் .அப்படி என்ன தப்பா சொன்னேன் .என்று சொல்லிக் கொண்டே முகத்தைத் திருப்பினாள் .

"சரி விடு காலையிலே மூஞ்ச தூக்காம" என்றாள் மூத்த மருமகள். 

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே பொலிஸ் ஜீப்பு வந்து நின்றது. அதைப் பார்த்ததும் எல்லோர்  முகமும் பயத்தில் உறைந்து போனது.

அப்போது அதில் வந்து இறங்கிய ஒரு பொலிஸ் அவர் அருகே வந்து கேட்டான் ."இந்தக் கார் யாருடையது."

"அது சேர் ஒரு ஆள் வந்து இங்கே வைத்து விட்டு .இப்போதுதான் அந்த வீட்டுக்குள் போனார்" என்றான் காந்தன். 

 "ஓ அப்படியா?" என்றவன் பொலிஸ் ஜீப்பு நிக்கும் பக்கம் பார்த்துக் கூறினான் .

"சேர் இது அவன் கார் தான் போல .சேர் அந்த வீட்டுக்குள் தானாம் போய் இருக்கானாம்" என்றான் அந்ந பொலிஸ் காரன்.
 கூறி முடிப்பதற்குள் .

கட கடவென ஏனைய பொலிஸ் காரர்கள் எல்லோரும் இறங்கினார்கள்.அந்த பூசாரி வீட்டை சுத்தி வளைத்து விட்டானுகள் .
கூட்டம் ஒன்றொன்றாய்க் கூடியது. பாட்டியும் வந்து விட்டார் .

'என்ன பிரச்னையாக இருக்கும்' என்னும் எதிர் பார்ப்போடு  அனைவரும் காத்திருக்க உள்ளே இருந்து அந்த பெண்ணின் குரல் கேட்டது .

"காப்பாத்துங்க... காப்பாத்துங்க" என்று காதில் தெளிவாகவே விழுந்தது. அப்போது  பைக்  ஆட்டோ என்று யார் யாரோ  எல்லாம் வந்தார்கள் .

மீடியாக்களும் வந்து விட்டார்கள் எல்லோரின் தொலைபேசியும்  லைவ் வீடியோ எடுத்த படியே இதைக் கவனித்த பெண்களில் 
பலர் மறைவாக விரைந்தனர் .

"அடி ஆத்தி வீடியோ எடுக்கானுகள். அக்கா நாம வேறு சட்டையோடு நிக்கிறோம் ஓடுங்க அந்தப் பக்கம்" என்றாள் சின்ன மருமகள் .

கொஞ்சம் துணிந்தவர்களும். வயது போனோரும் சோசளிச மீடியாவில் பயணிப்போரும். மட்டும் இதை பொருட்படுத்தவில்லை. எடுத்தால் எடுக்கட்டுமே  நாமும் வருவோம் நியூஸ் சொல்லும் போது. அவ்வளவுதான் என்று கூறி  விட்டு நின்றார்கள். 

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post