வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-50

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-50


246. வினா : எதனை விடுபவனுக்குத் துன்பம் இல்லை?
விடை: எதனெதன் மீது ஆசையை விட்டு விடுகிறானோ அதனதனால் ஒருவனுக்குத் துன்பமில்லை. 

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.(341)

247.வினா : வானோர்க்கும் உயர்ந்த புகழ் யாருக்குக் கிட்டும்?
விடை : 'நான்' என்ற ஆணவத்தை அழித்தவர்க்கு. 

யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.(346)

248.வினா யாரைப் பற்றிக் கொள்ள வேண்டும்?
விடை ஆசை இல்லாதவர்களை.
 
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.(350)

249.வினா வள்ளுவர் எக்கருத்தில் மெய்ப்பொருளைக் கூறுகிறார்?

விடை 1.பொருளின் தன்மையைப் பற்றியது. 

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.(355)

விடை : 2. பொருளின் தன்மையை அவரவர் விளக்கும் பொருள் பற்றியது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.(423)

250. வினா : எப்படி வாழ்ந்தால் துன்பங்கள் கெடும்?
விடை : ஆசை, சினம், மயக்கம் இவைகளை நீக்கி வாழ்ந்தால்

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்.(360)

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post