திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -56

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -56


குறள் 1267
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ 
கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் வரின்.

அம்மா!
என்நட்புத்தோழி 
நந்தினி 
ஊரில்இருந்து வந்தவுடன் 
இதுநாள்வரை பிரிஞ்சிருந்தத 
நெனச்சு கோபப்படுவேனா? 
பிரிவுக்கோபத்தை 
மறந்து 
எப்போதும்போல பேசுவேனா? 
இல்ல 
ரெண்டையும் 
கலந்து நடந்துக்குரு வேனா? 
அந்தமகிழ்ச்சிய நெனக்கும்போது 
ஒன்னும் புரியலியே!

குறள் 1268
வினைகலந்து வென்றீக வேந்தன் 
மனைகலந்து மாலை அயர்கம் விருந்து.

அம்மா! 
என்னுடைய அண்ணன் 
உலகநட்புநாள் கட்டுரைப் போட்டியில் 
கலந்துகொள்ள 
டில்லிக்கு போயிருக்கான்!
அவன்மட்டும் வெற்றிபெற்று 
குடியரசுத்தலைவர்கிட்ட 
பரிசுவாங்கிட்டானா 
அந்தவெற்றிய கொண்டாட 
என்உயிர்த்தோழி தேன்மொழியோட 
சேர்ந்து மகிழ்ச்சியில் திளைப்பேன்! 
இன்பத்தின் எல்லையில் 
உள்ளம் துள்ளத்துள்ள 
கொண்டாடுவேன்! 
அவளுக்குத் திகட்டத்திகட்ட 
இனிப்புகள் வழங்குவேன்!

குறள் 1269
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் 
சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

அம்மா 
மருத்துவமனையில 
இருக்காங்க!
அறுவைச்சிகிச்சை பண்ணாங்க!
ஏழுநாள் இருக்கனும்னு 
சொல்லிட்டாங்க! நாளைக்கு 
வீட்டுக்குவரப்போறாங்க! 
இத்தன நாள்கள் உளைச்சல்ல 
பறந்துபோச்சு!
எதிர்பார்க்கும் ஏக்கம் ஒருமாதிரி 
இருக்கும்.
ஆனால் இந்த ஒருநாள் பொழுது 
ஏழுநாள் ஆனது போல 
மெதுவா நகருது!
அம்மா ஏக்கம்னா இப்படித்தான்.

குறள் 1270
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் 
உறினென்னாம் உள்ளம் உடைந்துக் கக்கால்.

மனமே! 
பள்ளிக்கூடம் தெறக்கப் போகுதேனு 
என்நட்புத்தோழி 
பக்கத்துஊர் பாமாவைப் 
பார்க்கப்போனேன்! 
அவ சென்னையில் 
உள்ள பள்ளியில் சேரப்போயிட்டாளாம்! 
அங்கேயே தங்கிப் படிப்பாளாம்! 
கேள்விப்பட்டதும் மனசுகலங்கிடுச்சு! 
ஒடஞ்சுபோச்சு! 
மறுபடியும் சந்திச்சா என்ன? 
சந்திச்சுப் பேசுனாத்தான் என்ன? 
ஒருநன்மையும் இல்ல! 
எப்பவுமே பாத்துப்பழகுறது எப்படி? 
எப்பவாச்சும் பாத்துப்பேசறது எப்படி? 
நட்பு கடல்லகரைச்ச காயந்தான்!

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post