இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாட்டு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் முதற்கட்டமாக வரும் டிசம்பர் மாதம் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக எத்தனை வீரர்களை அணியில் தக்க வைக்கலாம்? எத்தனை வீரர்களை ஆர்.டி.எம் மேட்ச் கார்டை பயன்படுத்தி வாங்கலாம்? என்பது குறித்த ஆலோசனைகள் ஐபிஎல் நிர்வாகத்தின் உறுப்பினர்களிடையே நடைபெற்று வருகிறது.
மேலும் ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களிடமும் இது குறித்த கருத்து கேட்கப்பட்டு அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இறுதி முடிவினை ஐபிஎல் நிர்வாகம் எடுத்து மெகா ஏலத்தினையும் நடத்த காத்திருக்கிறது.
இந்நிலையில் இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாகவே சில வீரர்கள் அணி மாற்றம் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை அந்த அணியிலிருந்து வெளியேற்ற மும்பை அணியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள பல்வேறு வீரர்களுக்கும் பாண்டியாவுடன் சுமூக உறவு இல்லாததன் காரணமாக சூரியகுமார் யாதவை கேப்டனாக நியமித்து விட்டு ஹர்திக் பாண்டியாவை வெளியேற்ற அந்த அணி முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக நிச்சயம் மெகா ஏலத்திற்கு முன்னதாகவே ஹார்டிக் பாண்டியா அணிமாற்றம் செய்யவும் வாய்ப்பு உள்ளது. - அப்படி பாண்டியா அணி மாற்றம் செய்தால் நிச்சயம் ஆர்.சி.பி அணியின் கேப்டனாக செல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் ஏற்கனவே ஆர்.சி.பி அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அந்த கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து டூப்ளிசிஸ் தற்போது கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
ஆனால் அடுத்த ஏலத்திற்கு முன்னதாக அவருக்கு 40 வயதாகிவிடும் என்பதனால் பெங்களூரு அணியும் பாண்டியா ஒருவேளை அணிமாற்றம் செய்தால் நிச்சயம் அவரை வரவேற்று கேப்டன் பதவியை வழங்க வாய்ப்பு உள்ளது.
பேட்டிங், பௌலிங், பீல்டிங் என ஆல்ரவுண்டராக திகழும் பாண்டியா ஏற்கனவே குஜராத் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்ததால் நிச்சயம் அவர் பெங்களூருர் அணிக்கு வரும் பட்சத்தில் பெங்களூரு அணியிலும் புத்துணர்ச்சி பெற்றாலும் பெறலாம் என்பதற்காக அந்த அணி அந்த முடிவை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments