ஒரே ஓவரில் 6, 6, 6, 6, 6.. ஹண்ட்ரட் தொடரில் ரசித் கானை பொளந்த பொல்லார்ட்.. கடைசியில் கைமாறிய வெற்றி

ஒரே ஓவரில் 6, 6, 6, 6, 6.. ஹண்ட்ரட் தொடரில் ரசித் கானை பொளந்த பொல்லார்ட்.. கடைசியில் கைமாறிய வெற்றி


இங்கிலாந்தில் 100 பந்துகளை கொண்ட ஹண்ட்ரட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரின் 2024 சீசனில் ஆகஸ்ட் 10ஆம் தேதி சௌதம்டன் நகரில் உள்ள ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் 24வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் சௌதர்ன் பிரேவ்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற ட்ரெண்ட் ராக்கெட்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 126/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டாம் பாட்டன் 30, அடம் லித் 16, அலெக்ஸ் ஹேல்ஸ் 15, ஜோ ரூட் 16, ரோவ்மன் போவல் 16, கேப்டன் க்ரேகோரி 19 ரன்கள் எடுத்தனர். சௌதர்ன் பிரேவ்ஸ் சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் ஜோர்டான் 3, ஜோப்ரா ஆர்ச்சர் 2, பிரிக்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 127 ரன்களை துரத்திய சௌதர்ன் பிரேவ்ஸ் அணிக்கு 26 பந்துகளில் 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓபனிங் ஜோடி நல்ல துவக்கத்தை கொடுத்தது. அதில் அலெக்ஸ் டேவிஸ் 28 (19) ரன்களும் கேப்டன் ஜேம்ஸ் 28 (26) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். ஆனால் அடுத்ததாக வந்த ஆண்ட்ரே ப்ளக்சர் 1, டு பிளாய் 5, லாரி எவன்ஸ் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். போதாக்குறைக்கு அகில் ஹொசைன் 5 (9) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்ததால் வெற்றி கேள்விக்குறியானது. 

ஆனால் எதிர்புறம் 6வது இடத்தில் களமிறங்கியிருந்த கைரன் பொல்லார்ட் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடினார. குறிப்பாக கடைசி 20 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்ட போது உலகின் நம்பர் ஒன் டி20 ஸ்பின்னராக கருதப்படும் ரஷித் கான் பந்து வீசினார். 

ஆனால் அவர் வீசிய 5 பந்துகளை கொண்ட ஒரே ஓவரில் 6, 6, 6, 6, 6 என காட்டுத்தனமாக அடித்த பொல்லார்ட் அடுத்தடுத்து 5 சிக்சர்களைப் பறக்க விட்டார். அந்த வகையில் உலகின் நம்பர் ஒன் டி20 பவுலரையே பிரித்து மேய்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய பொல்லார்ட் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 45 (23) ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியில் கிரிஷ் ஜோர்டன் 8* (7) ரன்கள் எடுத்த உதவியுடன் 99வது பந்திலேயே சௌதர்ன் பிரேவ்ஸ் 127/8 ரன்கள் எடுத்தது. 

அதனால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற அந்த அணிக்கு கடைசி நேரத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்த பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். மறுபுறம் சாம் கோக் 2, ஜோஹின் டர்னர் 3 விக்கெட்டுகள் எடுத்தும் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

crictamil


 



Post a Comment

Previous Post Next Post