10 செகண்ட்தான் டைம்.. இந்த படத்தில் இருக்கும் யானையை கண்டுபிடிங்க பார்க்கலாம்!

10 செகண்ட்தான் டைம்.. இந்த படத்தில் இருக்கும் யானையை கண்டுபிடிங்க பார்க்கலாம்!


இணையத்தில் கொட்டிக்கிடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் ஏராளம், பறவைகள், விலங்குகள், மனிதர்கள், செல்லப்பிராணிகள் ஆகியோரது வித்தியாசமான, வியக்க வைக்கும் வகையிலான வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் லட்சக்கணக்கில் கொட்டிக்கிடக்குகிறது. இருப்பினும் சமீபகாலமாக, நெட்டிசன்களை தலை சுற்ற வைக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயைக்கு கிடைத்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒரு படத்திற்குள்ளோ அல்லது ஓவியத்திற்குள்ளோ மறைந்திருக்கும் புதிர் அல்லது கண்கட்டி வித்தை போல் ‘இருக்கு ஆனா இல்லை’ என மூளையை குழப்பும் காட்சிகள் என எதுவாக இருந்தலும் ஆப்டிகல் இல்யூஷன்கள் எப்போதும் நம்மை கவரக்கூடியவையாக இருக்கிறது.

ஆப்டிக்கல் இல்யூஷன்கள் எப்போதுமே கண்ணுக்கும் மூளைக்கும் ஒரே நேரத்தில் வேலை கொடுக்க கூடியவை. சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மூளையை பரிசோதிக்க உதவும், சில வகை உங்கள் குணநலன்களை கண்டறிய உதவும். எனவே தான் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் பல நூற்றாண்டுகளை கடந்தும் இன்றுவரை பிரபலமாக இருக்கின்றன.

தற்போது நாம் பார்க்கப்போகும் ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்திற்குள் மறைந்திருக்கும் யானையை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் நீங்கள் நினைப்பது போல் இது சுலபமான வேலை கிடையாது. ஏனெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள போட்டோவிற்குள் மறைந்துள்ள யானையை இதுவரை ஒரு சதவீதம் பேர் மட்டுமே சரியாக கண்டுபிடித்துள்ளனர்.

போட்டோவை நன்றாக ஊற்றுப்பாருங்கள். பெரிய மரங்களால சூழப்பட்ட அடர்ந்த காட்டிற்குள் வேட்டைக்காரர் ஒருவர் தனது வேட்டைக்கான விலங்கை ஆர்வமாக தேடிக்கொண்டிருக்கிறார். அது ஒருவேளை நாம் தேடிக்கொண்டிருக்கும் யானையாக இருக்குமோ?. வெறும் கண்களாலேயே ஒரு பெரிய யானையை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தாலும், இந்த புதிர் நீண்ட காலமாக நாம் சந்திக்கும் மிகவும் கடினமான ஒன்றாக விளக்கி வருகிறது. ஏனெனில் படத்தை எவ்வளவு நேரம் பார்த்தும் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை என இணையத்தில் கமெண்ட்கள் குவிந்துவருகின்றன.

நீங்களும் ஒருமுறை நன்றாக முயன்று பாருங்கள்… உங்கள் கண்களுக்கு யானை தென்பட்டதா? இல்லையா?. விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அதை கண்டுபிடிப்பதற்கான குறிப்புகளை நாங்களே தருகிறோம். முதலில் உங்கள் செல்போனை தலைகீழாக பிடியுங்கள். கையில் துப்பாக்கியுடன் பதுங்கியிருக்கும் வேட்டைக்காரருக்கு அருகே இருக்கும் இரண்டு பெரிய மரங்கள் தான் யானையின் கால்கள், அருகே இருக்கும் சிறிய மரம் தான் யானையின் தும்பிக்கை. 
இப்போது உங்களால் யானையை பார்க்க முடிகிறதா?. இப்படியொரு டுவிஸ்ட் இருப்பதால் தான் யாராலும் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை.

news18


 



Post a Comment

Previous Post Next Post