பார்வையால திங்குறியே பாதகத்தி பொங்குறியே!

பார்வையால திங்குறியே பாதகத்தி பொங்குறியே!


மூர்க்கமான பொண்ணு 
பார்க்கையிலே பண்ணு 
காந்தமான கண்ணு 
கணைதொடுக்கா நிண்ணு

கொந்தளிக்குது மூச்சி
கொக்கரிக்குது பேச்சி
கொஞ்சமாக்  கெஞ்சி 
கொஞ்சிக்கிறாள் வஞ்சி

காமக்கடலில் மிதக்கிறாள்
மோகத் துடுப்பெடுக்கிறாள்
வசிகரச் சொற்காளால் மடக்குறாள்
வளைச்சிப் போட நெனைக்கிறாள்

வெட்டும் விழிகளை 
மூடாமலே திறக்கிறாள் 
தொட்டுப் பார்த்திடும்
திட்டத்தோடு துடிக்கிறாள்

நாணிடும்  பெண்ணோ 
நாணம் விட்டு நிக்கிறாள் 
நானாக எட்டி நின்றாலும் 
நாயகனே யென அழைக்கிறாள்

நோக்கியே  நிக்கிறாளே
தாக்கம் கொடுக்கிறாளே
தவிப்பை அழைக்கிறாளே

மூர்க்கம் விரட்டுறாளே
முழுமையாகக் கேட்கிறாளே

நேக்கும் ஒண்ணும் 
புரியவில்லையே
நெஞ்சத்திலே கேள்விகளின் 
தொல்லையே

மஞ்சத்திலே 
தேடிடுவாயோ முல்லநானோ 
பஞ்சத்திலே வாழும் புள்ள

பாடாப் படுத்துறேயே
பருவம் உடுத்துறேயே
பாவி மகளே உள்ளத்தையே
பாரதப் போராக்கிறேயே

பார்வையால திங்குறியே
பாதகத்தி பொங்குறியே

 ஆர் எஸ் கலா


 



Post a Comment

Previous Post Next Post