Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-44


மழை விட்டும் தூறல் விடல்லை என்பது போல் பூசாரி சரவணனைப் பொலிஸ் பிடித்த பின்னரும், இன்னும் ஒவ்வொருவரும் அதனையே பேசிக் கொண்டு இருந்தார்கள். 

ஐந்து மணி அளவில், பாட்டியின் மகன்மார் எல்லோரும் பணி முடிந்து வீட்டுக்கு வந்தார்கள். வந்தவர்களிடம் காலையில் நடந்ததைக் கூறிக் கொண்டே தேநீர் கொடுத்தாள் .

மூத்த மருமகள் விளக்கம் கேட்டுக் கொண்டே தேநீரைக் குடித்தார்கள் அவர்கள். சின்னவ அப்படியே ஓரமாய் போய் அமர்ந்தவாறே கூறினாள். 

"எனக்கு விடை தெரியாத வரையும், ஒரே தலை வலியாகவே இருக்கும்". என்று  "ஆமா ஆமா அது உன் புத்திதானே" என்றான் அவ புருசன்.

"அடயே சும்மா இருடா எனக்கே முடிவு தெரிய வேணும் என்று சிந்தனை வருகிறது. நீ வேறு அவளோடு தனகாதே" என்று கூறினான் அண்ணன் காரன். 

அண்ணா என்றாலே ஒரு மரியாதை. உடனே அவனும் மௌனம் ஆனான்.

அப்போதுதான் வளமைக்கு மாறாக குரல் கொடுத்தார் மேரி அக்கா.

"என்ன அக்கா கத்துகிறாய்" என்ற வாறே. மூத்தவ கதவைத் திறந்தாள்.  
"அடியேய் புள்ள அங்க கொஞ்சம் பாரு சத்தம் கேட்கவில்லையா?உங்களுக்கு"  என்றார்  .

உடனே திரும்பி பார்த்த மூத்த மருமகள். சொன்னாள் "இங்கே கொஞ்சம் வெளியே வாங்களேன்" என்று. கூப்பிட்டாள் கணவனை .

அலைக்கும் போதே ஏனையோரையும் இணைத்தாள்.  அவளின் அழைப்புக்கு வெளியே வந்தவர்கள் .அவளது பார்வையைக் கவனித்து அங்கே திரும்பி நோக்கினார்கள். 

மீண்டும் காவல் துறையின் வாகனம் இம்முறை  வேறு யாரோ அதிகாரியும். வந்திருப்பதாகத் தெரிகிறது  .

 "நாங்க போய் பார்க்கிறோம்" என்று கூறி ஆண்கள் போனார்கள். 

போகும் போதே சின்னவள் சொன்னாள். 
"கூட்டத்தோடு போய் நிக்காதீர்கள்." என்று 

"ம்ம்ம்" போட்டு விட்டுப் போனார்கள்  .

ஆம் அங்கே நீதிபதியும் நின்றிருந்தார். ஏதோ மரவனு பரிசோதனை செய்வோரும் மருத்துவர் பலர் இவர்களோடு பத்திரிக்கை நிருபர்கள். கூடவே பூசாரி சரவணனையும் கையில் விலங்கோடு வைத்திருந்தார்கள்.

இன்னும் ஒருத்தன் பார்த்தால் குடிகாரன் போல் தோற்றம். வேடிக்கை பார்த்திட ஊர் கூடி விட்டது .

என்ன?இது பட்டணம் என்பதால் கொஞ்சம் நாகரீகமான உடையும் பேச்சுமாய் இருந்தார்கள் .

அதுவே கிராமம் என்றால்  சொல்லவே தேவையில்லை .

அந்த இடம் மீன் சந்தை போல் இருந்திருக்கும் . 

ஏதோ பேசிக் கொண்டே கையில் இருந்த காகிதங்களைப் பார்த்துக் கொண்டு இருந்த நீதிபதி சற்று திரும்பும் போது பாட்டியோட மூத்த மகனைப் பார்த்து விட்டார்.

உடனே அருகே வந்து தன்னை அறிமுகம் செய்து விட்டு ஆறத்தழுவினார் அண்ணன் தம்பி இருவரையும்  .

"நீங்க இங்கு தான் இருப்பதா?  அம்மா நலமா? நான் ஞாயிறு கண்டிப்பாக வருகிறேன்.  இப்போது பணியின் நிமித்தமாய் வந்தேன். தனிப்பட்ட விடையங்கள் பார்த்திட முடியாது. நீதியைக் காத்திடும் நாமே அதை மீறுவது நல்லது அல்ல. ஆனால் ரொம்ப சந்தோசமாய் இருக்கு உங்களைப் பார்த்தவை நான் நிச்சியம் வருவேன் ஞாயிறு  அம்மாவிடம் கூறுங்கள்"  என்று கூறிய நீதிபதி மோகன் விடை பெற்று சரவணன் இல்லம் நுழைந்தார் யார்? 

இந்த நீதிபதி  மோகன்?  எதற்காக. இத்தனை தடவை சரவணன் வீட்டை சோதனை இடுவது. 

விடை வேணுமா? காத்திருப்போம்

(தொடரும்)




 



Post a Comment

0 Comments