Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-53


261.வினா: யார் ஆட்சியில் மக்கள் நிறைவுடன் வாழ்வர்?
விடை: குறை சொல்பவர் பழிச் சொல்லையும் பொறுத்து ஆள்பவர் ஆட்சியில்.
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.(389)

262. வினா : ஆட்சியாளர்க்குச் சுடர் போன்றவன் யார்?
விடை: கொடை, அன்பு, நல்லாட்சி, மக்களைக் காத்தல் இப்பண்புகளுள்ள அரசன் 
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி,(390)

263. வினா: எதனை எப்படிப் படித்தல் வேண்டும்?
விடை:குற்றமற்ற  நூல்களைத் தேடிப் படிக்க வேண்டும்
 கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.(391)

264. வினா: வாழும் உயிர்க்கு கண் போன்றது எது?
விடை: எண்ணும், எழுத்தும் 
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.(392)

265.  வினா: கண்ணுடையோர் யார்?
விடை: கற்றவர்கள்
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.(393)

(தொடரும்)


 



Post a Comment

0 Comments