அரசின் அதிரடி மாற்றங்கள்-4

அரசின் அதிரடி மாற்றங்கள்-4


கல்விக்கு முக்கியத்துவம்:

"இந்நாட்டின் ஒவ்வொரு தாய்க்கும் தகப்பனுக்கும்  தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய  ஏக்கம் ஏற்பட இடமளிக்கமாட்டேன்.  தனது பிள்ளைக்கு சிறந்த பாடசாலை, சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கான உரிமை  ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது.   அனைத்துப் பிள்ளைகளுக்கும்   தலைசிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புச் செய்து எதிர்கால சந்ததியினரை  பாதுகாத்திட  அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்.  அறிவு, திறன், உளப்பாங்கினை விருத்திசெய்வதன் மூலமாக எமது நாட்டின் இளைஞர் தலைமுறையினருக்கு  நம்பிக்கை வைக்கக்கூடிய  எதிர்காலமொன்றை உருவாக்குவோம்" என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கு அனுமதி:

அனுர அரசில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக, மத்திய வங்கி ஆளுநர்  நந்தலால் வீரசிங்க  தெரிவித்துள்ளார்.

85 எம்.பி.க்கள் ஓய்வூதியம் இழந்தனர்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, சுமார் 85 எம்.பி.க்கள் ஓய்வூதிய உரிமையை இழந்தனர்.

பாராளுமன்றத்தில் 5ஆண்டுகளை நிறைவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்நாள் முழுவதும் 45,000/- ரூபாவை  ஓய்வூதிய மாகப் பெறுவார்.

ஆனால், அடுத்த ஆண்டு முடிவடையவிருந்த பாராளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டுள்ளதால் மேற்படி எம்.பி.க்கள் அந்த சிறப்புரிமையை இழப்பார்கள்.

09வது பாராளுமன்றம் 20 ஆகஸ்ட், 2020 அன்று தொடங்கியது. அதன்படி, பாராளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு
 3 வருடங்களில் 26 கோடி ரூபா:

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன கோட்டாபய ராஜபக்ஷஆகிய ஜனாதிபதிகள் முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின்மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோரின் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான செலவு 26 கோடி ரூபா என மத்திய வங்கியின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது

இவர்களுக்காக, 2022ல் 70000000  ரூபாவும், 2023ல் 80000000  ரூபாவும்,2024ல் 110000000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகப் பொருளியல், விஞ்ஞான புள்ளிவிபரவியல் கல்வி பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோராள கூறுகிறார்.

வாகனங்கள் ஏலம் விடப்படாது 

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கைவிடப்பட்ட எந்த வாகனமும் ஏலம் விடப்படாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை மீள ஒப்படைக்க உத்தரவு:

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய அரச குடியிருப்புகளை விரைவில் மீள ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை குறைப்பு:

இன்று( 30)நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டை பயன்படுத்தப்படும் உணவுப் பதார்த்தங்களான ஃப்ரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் 'கேக்' விலையும் குறைக்கப்படலாம் என்று நம்பப் படுகின்றது.


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post