மலேசியா:ஜொகூரில் வீடுகளை உடைத்து திருடுவது, வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்டு வந்த பாலா கும்பலை போலிசார் முறியடித்தனர்.
ஜொகூர் மாநில போலிஸ் தலைவர் எம்.குமார் இதனை தெரிவித்தார்.
ஜொகூரில் பல மாவட்டங்களில் குற்றச் செயல்களில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் 11 சந்தேக நபர்களை கடந்த மாதம் கைது செய்ததன் மூலம் இக்கும்பலை போலிஸார் முறியடித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 26 வரை நடந்த தொடர் சோதனையில் ஒன்பது ஆண்கள், இரண்டு பெண்களை போலிசார் கைது செய்தனர்.
பாலா கும்பலின் தலைவன் உட்பட கைதான அனைவரும் 20 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
இக்கும்பல் கூலாய், பொன்தியான், மூவார் ஆகிய மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.
வேலி, பாதுகாப்புப் பகுதிகளில் இல்லாத வீடுகள் அல்லது ஆடம்பர வீடுகளையே இந்தக் குழு குறிவைத்து கொள்ளையடித்து வந்துள்ளது.
குறிப்பாக ஆயுதங்களை கொண்டு இக்கும்பல் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments