அரசின் அதிரடி மாற்றங்கள்-10

அரசின் அதிரடி மாற்றங்கள்-10


துப்பாக்கி, தோட்டாக்களை ஒப்படைக்க காலக்கெடு:

சிவில் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களையும் நவம்பர் 11ம் திகதிக்கு முன்னதாக கடற்படையின் வெலிசறையிலுள்ள அரச வணிக வெடிபொருட்கள் களஞ்சியசாலையில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு. 

1500 நபர்களுக்கு 1650 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் யோஷித ராஜபக்ஷவிடம் 7 துப்பாகிகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு ஆதரவளிக்க எரிக் சொல்ஹெய்ம் சர்வதேசத்துக்கு பரிந்துரைப்பு:

அமைதியான, பல்லின, பசுமையான மற்றும் வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு சர்வதேச சமூகம் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என நோர்வே இராஜதந்திரியும் முன்னாள் அரசியல்வாதியுமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது:

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் கடமையாற்றும் பிரதி ஆணையாளர் மற்றும் எழுத்தர் ஒருவரும், தரகர் ஒருவரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு இந்தியா முழுமையான ஆதரவு:

இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பின்போது, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்குமென இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்ததாக,  ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி லெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடையே சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.

மறுபடியும் சிலிண்டர் சின்னம்:

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இம்முறை பொதுத்தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அதன் தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு

வீதி திறந்து வைப்பு:

2005ம் ஆண்டு மூடப்பட்ட அலரி மாளிகையை அண்மித்த வீதி 19 வருடங்களுக்கப் பின் மக்கள் பாவனைக்காக மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ராமண்ய பீடத்தின் மகாநாயக்க தேரரை ஜனாதிபதி சந்தித்தார்:

இன்று  நாராஹேன்பிட்டியில் அமைந்திருக்கும் ராமண்ய பீடத்திற்கு சென்ற ஜனாதிபதி திசாநாயக்கா, இலங்கை ராமண்ய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. மகுலேவே விமலநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

அநுநாயக்க தேரர்கள், பதிவாளர்கள் தலைமையிலான மகா சங்கத்தினர் இதன்போது கலந்துகொண்டிருந்ததோடு, அவர்கள் செத் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கினர். 

அதனையடுத்து ஜனாதிபதி தற்போதைய பொருளாதார அரசியல் நிலைமைகள் குறித்து மகா சங்கத்தினருக்கு எடுத்துக்கூறும் வகையில் சிறிது நேரம் கலந்துரையாடினார். 

தூதுவர்களை நியமிக்கும்போது,  கற்ற, அறிவார்ந்த, வௌிநாடுகளில் இந்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பொறுத்தமானவர்களை நியமிக்குமாறும், ஆளுநர்களை நியமிக்கும்போதும் பொறுப்பானவர்களை நியமிக்குமாறும் மகா சங்கத்தினர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர். 

அதேபோல் அமைச்சுக்களின் செயலாளர் பதவிக்கும் பொறுத்தமானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.



 



Post a Comment

Previous Post Next Post