திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-160

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-160


குறள் 421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

நல்ல அறிவுங்கிறது நமக்கு அழிவு வராம காக்கக்கூடிய ஒரு கருவி. பகைவர்களால ஒண்ணுமே செய்யமுடியாத ஒரு பாதுகாப்பு அரண். 

குறள் 426
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.

ஒலகத்துல இருக்க பெரிய ஆளுங்க எப்படி வாழ்றாங்களோ அதுக்கு ஏத்த மாதிரி நாமளும் வாழ்றது தான் அறிவுள்ள செயல். 

குறள் 427
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

படிச்சவங்களுக்கு  ஒண்ணு செஞ்சா அடுத்தாப்ல பதிலுக்கு என்ன நடக்கும்ங்கிறது நல்லா தெரியும். ஆனா படிக்காதவொளுக்கு அதுல்லாம் ஒரு மண்ணும் தெரியாது. 

குறள் 430
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

நல்ல அறிஞர்கள்னா சிலது இல்லாட்டாலும் எல்லாம் இருக்கவங்க தான். ஆனா அறிவில்லாதவங்க கிட்ட என்ன இருந்தாலும் ஒண்ணுமே இல்லாதவங்க தான். 

குறள் 431
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

இறுமாப்பு, கோவம், சின்னத் தனம் இதுல்லாம் இல்லாம இருக்கவங்களோட செல்வாக்கும் பெருமையும் மேன்மையானது. 

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post