அரசின்அதிரடி மாற்றங்கள்-5

அரசின்அதிரடி மாற்றங்கள்-5


உலகம் மதிக்கும் கடவுச்சீட்டு

இந்த நாட்டின் கடவுச்சீட்டை உலகமே மதிக்கும் நிலைக்கு, நாம் நாட்டை கட்டியெழுப்புவதும்,  இந்நாட்டுப் பிரஜைகளுக்கு 'நான் இலங்கையர்' என்று பெருமையுடன் கூறக்கூடிய நாட்டை உருவாக்குவது இந்நாட்டின் பிரஜையாக இருப்பது பெருமை என்று நம் நாட்டு மக்கள் உணரும் வகையில் இந்த நாட்டை உருவாக்குவதும் அவசியம். 

எரிபொருள்களின் விலை குறைப்பு!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் Ceypetco எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளது.

பெட்ரோல் ஒக்டேன் 92 ரூ.21 குறைக்கப்பட்டு ரூ. 311 ஆகவும், ஒட்டோ டீசல் ரூ.24 குறைந்து ரூ.283 ஆகவும், சுப்பர் டீசல் ரூ.33 குறைந்து ரூ.319 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் ரூ.19 குறைந்து ரூ.183 ஆக உள்ளது. பெற்றோல் 95 இன் விலையில் மாற்றமில்லை.

மாகாண சபைத் தேர்தல்

பொதுத் தேர்தலை தொடர்ந்து நிச்சயமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.

முட்டை அதியுயர் விலை:

முட்டை 28-30 ரூபாவிற்கு அதிகமாக விற்பனை செய்தால் உடனே 1797 எனும் துரித இலக்கத்திற்கு அழைக்கும்படி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த விலைக்கு விற்பது நஷ்டம்தான் என்று உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

கோழி இறைச்சி விலை குறைக்கப்படலாம்:

கோழி இறைச்சியின் விலை குறைக்கப் படவுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை நூறு ரூபா தொடக்கம் நூற்றைம்பது ரூபா வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 1,000 முதல் 1,100 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளதோடு, அடுத்த பதினைந்து நாட்களில் இது 900 முதல் 850 ரூபாய் வரை குறையலாம் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை முட்டையின் விலையும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் 20 ரூபா வரையிலும் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வரிப்பணம் துஷ்பிரயோகம்:

இதுவரை அரசியல்வாதிகள் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து, மக்களின் வரிப்பணத்தை வீணடித்திருப்பதும், அவற்றைக்கொண்டு அவர்கள் ஆடம்பரமாகவும்,சொகுசாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதும், இன்று காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களைப் பார்க்கும்போது மக்கள் புரிந்துகொள்கின்றார்.
CLICK 👇👇👇


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post