வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-61

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-61


310. 
வினா:பொருளைப் போற்றிக் காக்கும் நெறி எது?
விடை: தன் அளவு அறிந்து உதவ வேண்டும் 
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி.(477)

311. வினா: வருவாய் குறைந்தாலும் கேடில்லை எப்போது?
விடை: செலவுகள் பெருகாதிருக்கும் போது 
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கன.(478)

312. வினா: உளபோல் இல்லாகிக் கெடும் எது?
விடை: அளவறிந்து வாழாதான் வாழ்க்கை
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.(479)

313 . வினா:செல்வம் விரைவில் அழியும் எப்போது?
விடை: தன் அளவு அறியாது வாரிக் கொடுத்தால்
 உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும்.(480)

314.. வினா: முடியாத செயல் என ஒன்றில்லை யாருக்கு?
விடை: தக்க கருவியால் காலம் அறிந்து செய்பவருக்கு 
அருவினை என்ப உளவோ கருவியாள் காலம் அறிந்து செயின்.(483)

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post