வள்ளுவரும் வாழும் குறளும் (பன்முக ஆய்வு)-8

வள்ளுவரும் வாழும் குறளும் (பன்முக ஆய்வு)-8

வள்ளுவரின் காலம்


சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கோழ அரசனான மணக்கிள்ளி என்பவரின் மகளை மணந்து, தவ புதல்வர்களாக இரு மகள்களை ஈன்றெடுத்தான். புதல்வர்களில் ஒருவன் பெயர் செங்குட்டுவன், மற்றவன் பெயர் இளங்கோ என்பதாகும். இந்த வரலாற்று உண்மையினை இளங்கோவடிகளே தமது உரையில் விளக்கிக் கூறுகிறார்.

"குமரியொடு வடவிமயத்து ஒருமொழி வைத் துவகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர்செங் களம் வேட்டுக் கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய செங்குட்டுவன்" என்று இலங்கோவடிகள், செங்குட்டுவனின் பிறப்பு பற்றிக் குறிப்பிடுகிறார்.

இளங்கோவடிகள், தனது அண்ணன் செங்குட்டுவனுக்காக அறவு பூண்டார் என்ற செய்தியை நாம் அறிந்த ஒன்றே. இச்செய்தியைக் குறிக்கின்ற வகையிலே 

குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்கு" (சிலப்பதிகம்) என்ற பாடல் நமக்குத் நண்கு விளக்குகிறது.

சிலப்பதிகாரத்தின் தலைவி கண்ணகி, தன் கணவன் கொலையுண்ட செய்தியை அறிந்து, பாண்டிய மன்னன். அரசி ஆகியோருக்கு, நீதியை உணர்த்தி, அவர்களுக்கு இறுதிக்காலம் காட்டி, தன் கற்பின் திறத்தால் மதுரையை எரித்து, நானும் தள் கணவனுடன் உடன்கட்டையேறினாள் என்பதை அறிந்த சேரன் செங்குட்டுவன், அவளது தெய்வக் கற்பினை மிகவும் வியந்து, அவளை ஒரு வழிபடு தெய்வமாக ஆக்க வேண்டும் என்று எண்ணி, இமயமலை சென்று, கல் கொண்டு வந்து, அதில் ஒரே கல்லிலே கண்ணகியின் உருவத்தைச் சிற்பமாகச் செதுக்கி, விழா கொண்டாடினான்.

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post