திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -67

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -67


குறன் 1302
உப்பமைந் தற்றால் புலவி 
அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்.

இந்தபாரு காஞ்சனா 
என்ன கோபம்னாலும் 
பேசித் தீர்த்துக்கணும்! 
உம் முனுமுகத்தைத்

தூக்கிவைக்கக் கூடாது! 
நான்இப்படித்தான்! பொன்னி! 
நீஎன்னவிட ஒருவகுப்பு 
கூடுதலாக ஆறாவது 
படிக்கலாம்! 
அதுக்காக விட்டுத்தரணுமா? 
அம்மாதாயே! 
எல்லாமே உப்புபோல 
அளவா இருக்கணும்! 
அதிகமாப் போனா கசந்துரும்! 
போதும்போதும் 
கோபமெல்லாம். 
தெரிஞ்சுதா! 
மணியடிச்சுருச்சு! 
வகுப்புக்குப்போ! 
சிரிப்பப்பாரு!

குறள் 1303
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் 
தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்.

ஏண்டி கோமதி 
நம்ம தோழி வளர்மதியோட
பேசமாட்டேங்கற? 
பாமதி! அவதானே 
சண்டபோட்டா 
அவதானே பேசணும்! 
கோமதி! அவ ஏற்கனவே
நொந்து வாடிப்போயிருக்கா! 
உன்னோட பேசனும்னு 
துடிக்கிறா! 
பழம்போடாம போனா 
துன்பத்துல இருக்குறவ 
துன்பம் 
மேலும் அதிகமாகும்டி!

குறள் 1304
ஊடி யவரை உணராமை 
வாடிய வள்ளி முதலரிந் தற்று.

என்னம்மா! 
ஆமா நீ வள்ளியோட 
பேசமாட்டேங்கற! 
பாக்கமாட்டேங்கற! 
அம்மா! அவதாம்மா 
கோவிச்சுக்கிட்டா! 
சரிசரி! நட்புல 
இதெல்லாம் இருக்குந்தான்! 
அவன் சமாதானப்படுத்தி 
இணக்கமாபோ! 
இது எப்படி இருக்குன்னா 
ஏற்கனவே வாடிப்போன 
கொடியோட அடிப்பகுதிய 
அறுக்குறமாதிரி இருக்கு! 
புரிஞ்சுதா? 
அஞ்சாவது ஆறாவதுலேயே
 இப்படியா!

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post