Ticker

6/recent/ticker-posts

அறுகம்பை தாக்குதல் திட்டம்:மூளையாக செயற்பட்டவர் யார் தெரியுமா...!

அறுகம்பை பகுதியில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் கொழும்பு(colombo) போதைப்பொருள் கடத்தல்காரர் என பயங்கரவாத புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட தமிழ் நபருக்கும் மாலைதீவு(maldives) பிரஜைக்கும் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ள ஒருவர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் போதைப்பொருள் கடத்தல்காரனிடம் ஏதாவது உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர்கள் கடத்தல்காரரை சந்தித்தார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, தொடர்புடைய கடத்தல்காரரும் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த திட்டமிட்ட தாக்குதலின்படி, இஸ்ரேலியர்கள்(israel) அதிகம் நடமாடும் இடத்திற்கு சென்று கத்தியால் குத்தி காயங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் பின்னணியில் உள்ள அனைவரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை மற்றும் உளவுத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

லெபனான் மற்றும் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் காசா பகுதியை அழித்தது மற்றும் ஹிஸ்புல்லாவின் தலைவரின் படுகொலை ஆகியவை இந்த தாக்குதலைத் திட்டமிடுவதற்கான முக்கிய காரணம்.

எனினும், இந்த நாட்டுக்கு வருகை தரும் இஸ்ரேலியர்களுக்கு தெரியாமல்  உளவுத்துறையினர் அவர்களை பின்தொடர்ந்து செல்ல முடிவு செய்துள்ளனர். இரண்டு வாரங்களாக இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளபடி, இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இந்நாட்டிற்கு வந்த இஸ்ரேலிய பிரஜைகளின் எண்ணிக்கை 20515 ஆகும். மேலும், 43678 அமெரிக்கர்கள் உள்ளனர். 134,464 பிரித்தானியர்களும் உள்ளனர்.

அறுகம்பை கடற்கரையில் கடலலைச் சறுக்கல் செய்வதற்கு இந்த சீசன் சரியான நேரம் என்று கூறப்படுகிறது, எனவே ஏராளமான இஸ்ரேலியர்கள் வருகை தருகிறார்கள். அந்த நேரத்தில்,  அந்த பகுதியில் அவர்கள் உருவாக்கிய ஹீப்ரு மத இடங்களில் மத விழாக்கள் மற்றும் அணிவகுப்புகளிலும் பங்கேற்பார்கள், எனவே அவர்கள் அவ்வாறு பயணம் செய்வதை நிறுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

இதுதவிர மாத்தறை, வெலிகம, காலி, ஹிக்கடுவ, நீர்கொழும்பு, எல்ல போன்ற பிரதேசங்களிலும் காவல்துறை விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. 

ibctamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments