காணி கொள்வனவு தொடர்பான வழக்கு (25) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்த வழக்கில் மூன்றாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உடல்நிலை சீரற்று இருப்பதன் காரணமாக அமெரிக்காவிலிருந்து மருத்துவ அறிக்கையை சட்டத்தரணிகளூடாக, நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
இதனையடுத்தே, எதிர்வரும் விசாரணை திகதியில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பிரதேசத்தில் காணியொன்றை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த காணி, கனடாவில் வசிக்கும் பசில் ராஜபக்ஷவின் மனைவியின் சகோதரியின் பெயரில் ஜேர்மன் பிரஜை ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணியை கொள்வனவு செய்வதற்கு அவரது கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதுடன், பணம் எவ்வாறு பெறப்பட்டது என்பதை அவர்கள் நிரூபிக்கத்தவறிய காரணத்தினால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
vaaramanjari
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments