Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரும் வாழும் குறளும் (பன்முக ஆய்வு)-12


இவ்வுக்கிரப்பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் நண்பராக இருந்தார்கள் என்பது, ஔவையார் பாடிய 'நாகத்தன்ன பாகார் மண்டிலம்' என்னும் புறநானூற்றுச் செய்யுளால் நமக்குப் புலனாகிறது.

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளிக்கும் சேரமான் யானைகட் சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறைக்கும் போர் நடந்தச் செய்தியை 'பருத்திப் பெண்டிர்' என்னும் புறப்பாட்டினால் நாம் காணலாம்.

தகடூர் எரிந்த சேரமான் பெருஞ்சேரலிரும்பொறை. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு மூத்த மகள் என்பதும், யானைகட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை அவருக்கு இளைய மகன் என்பதும் அவர் பெயர் ஒற்றுமையே அதற்குச் சான்றாக இருக்கிறது என்று சொல்லலாம். மூத்த மகன் என்பதனால் 'பெருஞ்சேரல்' எனவும் இளைய மகன் என்பதால் வெறும் 'சேரல்" எனவும், பெயரிட்டு அழைத்ததாகக் கொள்ளலாம்.

செல்வக் கடுங்கோ முடிகுடி 'கோச்சேரமான் யானைகட் சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை' எனும் பட்டம் பெற்றார். இவர் இந்த பட்டம் பெறும்போது சுபிலர் இறந்துபட்டார் என்ற செய்தியாக,"செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க கபிலன் இன்றுள னாயின் நன்றுமன்"என இளங்கீரனார், செல்வக்கடுங்கோவின் நல்ல நண்பனாக விளங்கிய கபிலரைக் குறிப்பிடுகிறார்.

கோச் சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை, தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனால் போரில் கொல்லப்பட்டார்.

இவருக்குப் பின் அரியணை ஏறியவரே உக்கிரபெருவழுதி. சேரமான் செல்வக் கடுங்கோ கி.மு.36 ஆம் ஆண்டு அரசுபுரியத் தொடங்கினான் என்பதை நாம் முன்னமே தெரிந்தமையால், இவன் இளைய மகனைக் கொன்ற தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கி.மு. 30 ஆம் ஆண்டில் இருந்தான் எனவும், இவருக்குப் பின்னே கி.மு. 26-ஆம் ஆண்டில் உக்கிரப் பெருவழுதி சங்கம் நிறுவிச் செந்தமிழ் மிக வளம்படுத்த வாழ்ந்தான். இவரது காலம் கடைச் சங்க காலமாகும்.

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments