Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-66

335. வினா: பிறர் அறிய சிறப்புச் செய்யப்படக் கூடாதவர் யார்?
விடை : ஒற்றர் 
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தா னாகும் மறை.(590)

336. வினா: உடையர் எனப்படுவது எது?
விடை: ஊக்கம்
உடையர் எனப்படுவது ஊக்கம்அஃ தில்லார் உடையது உடையரோ மற்று,(591)

337. வினா: நில்லாது நீங்கி விடும் எது?
விடை: பொருளுடைமை 
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.(592)

338. வினா: எது நிலையான செல்வம்?
விடை: ஊக்கமே
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.(592)

339. வினா:எது நிலையற்ற செல்வம்?
விடை: பொருட்செல்வம்
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.(592)

(தொடரும்)

 Ai SONGS

Post a Comment

0 Comments